ஓ.பன்னீர்செல்வத்தை காலி செய்ய பலே திட்டம்... திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பதவி..!

Published : Oct 01, 2020, 01:49 PM IST
ஓ.பன்னீர்செல்வத்தை காலி செய்ய பலே திட்டம்... திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு முக்கிய பதவி..!

சுருக்கம்

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் திமுக கட்சியில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தேனி மாவட்டத்தை கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 

தேனி தெற்கு மாவட்டம்

கம்பம்
ஆண்டிப்பட்டி

தேனி வடக்கு மாவட்டம்

போடிநாயக்கனூர்
பெரியகுளம்(தனி)

இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் தேனி வடக்கு மற்றும் தேனி தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.

மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேனி தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர் - கம்பம் என்.இராமாகிருஷ்ணன்

தேனி வடக்கு  மாவட்டம்

பொறுப்பாளர் - தங்க தமிழ்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!