நம்பி வந்த தோழியை புதரில் வைத்து நாசம் செய்த இளைஞன்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கி அட்டூழியம்.

Published : May 16, 2022, 06:05 PM IST
நம்பி வந்த தோழியை புதரில் வைத்து நாசம் செய்த இளைஞன்.. நண்பர்களுக்கும் விருந்தாக்கி அட்டூழியம்.

சுருக்கம்

தன்னுடன் பூங்காவுக்கு வந்த தோழியை நண்பர்களுடன் சேர்ந்து இளைஞன் கற்பழிப்பு நாசம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கற்பழிப்பில்  தொடர்புடைய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தன்னுடன் பூங்காவுக்கு வந்த தோழியை நண்பர்களுடன் சேர்ந்து இளைஞன் கற்பழிப்பு நாசம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கற்பழிப்பில்  தொடர்புடைய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆறு மாதக் குழந்தை முதல் 60 வயது பிரதிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காதலிப்பது போல் நடித்து கற்பழித்தல், காதலிக்க சொல்லி வற்புறுத்துவது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது போன்ற எண்ணற்ற கொடுமைகள் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நண்பனை நம்பி பூங்காவிற்கு சென்ற பெண் நண்பன் உள்ளிட்ட 3 வாலிபர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஒரு பெண் தனது தோழனுடன் இரவு பூங்காவிற்கு சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவர்கள் இருவரும் சென்றனர் அப்போது ஏற்கனவே அங்கு இரண்டு இளைஞர்கள் புதரில் பதுங்கி இருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக மூவரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் வாயை பொத்தி புதருக்குள் தூக்கிச்சென்று மாறி மாறி கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பின்னர் அந்த பெண் அலறி அடித்து வெளியில் ஓடி வந்தார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினார், இதனையடுத்து அவர்கள் காவல் நிலைத்தில் புகார் கொடுத்தனர். அதில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண்ணின் நண்பன் ரஞ்சித் இந்த பெண்ணை நைசாக பேசி பூங்காவிற்கு அழைத்துச்  சென்றதும், ஏற்கனவே அங்கு பங்கஜ் மற்றும் பவன் ஆகி இளைஞர்கள் இருந்ததும், அதன்பின்னர் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. இந்நிலையில் பங்கஜ் மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் பவன் என்ற நபரை தேடி வருகின்றனர். மூவரும் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ஜூனில் வரவு, ஜூலையில் ஜாக்பாட்.! இன்னும் 30 நாட்களில் கிடைக்க போகும் ரூ.2,500 சர்ப்ரைஸ்.!
Vijay's Gold Scheme: கல்யாணத்துக்கு 8 கிராம் தங்கம், குழந்தை பிறந்தா மோதிரம்! எப்போ கிடைக்கும் தெரியுமா?