கடவுளின் அவதாரம் யார் தெரியுமா ? அட நம்ம பிரதமர் மோடிதான்.. பிரதமருக்கே 'ஷாக்' கொடுத்த அமைச்சர் !!

Published : Jan 19, 2022, 07:13 AM IST
கடவுளின் அவதாரம் யார் தெரியுமா ? அட நம்ம பிரதமர் மோடிதான்.. பிரதமருக்கே 'ஷாக்' கொடுத்த அமைச்சர் !!

சுருக்கம்

நாட்டின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, விரக்தியான சூழல் நிலவியபோது, ​​அதை முடிவுக்குக் கொண்டு வர கடவுளின் அவதாரமாக பிறந்தவர் தான் நம் பிரதமர்  நரேந்திர மோடி என்று அமைச்சர் ஒருவர் கூறியுள்ள காணொளி வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் கமல் பட்டேல், செய்தியாளர்களிடம் நேற்று பேசினார். அப்போது, ‘இந்தியாவை வழிநடத்துவது, ஊழலிலிருந்து விடுவிப்பது, பொது நலனை உறுதி செய்வது போன்ற பிரதமர் மோடியால் நிறைவேற்றப்பட்ட பணிகள் சாதாரண ஒருவரால் நிறைவேற்றபடாதவை.

இந்தியாவில் எந்த ஒரு நெருக்கடியான நிலையும், கொடுங்கோல் சூழலும் அதிகரித்த போதெல்லாம், கடவுள் மனித வடிவில் அவதாரம் எடுக்கிறார் என்று நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் கூறப்பட்டுள்ளது. ராமர் மனித உருவில் அவதாரம் எடுத்து, ராவணனைக் கொன்று மற்ற தீய சக்திகளை வென்று, மக்களைப் பாதுகாத்து 'ராமராஜ்யத்தை' நிறுவினார். கம்சனின் அட்டூழியங்கள் அதிகரித்தபோது, ​​பகவான் கிருஷ்ணர் பிறந்து அவரது கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளித்தார். அதேபோல், காங்கிரஸ் ஆட்சியில் அட்டூழியங்கள் அதிகரித்தபோது ஊழல், சாதி வெறி தலைதூக்கி, நாட்டின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு, விரக்தியின் சூழல் எங்கும் நிலவியபோது, ​​அதை முடிவுக்குக் கொண்டுவர நரேந்திர மோடி பிறந்தார். இவை ஒரு சாதாரண மனிதனால் செய்ய முடியாத காரியங்கள்.எனவே, பிரதமர் மோடி ஒரு அவதாரம், சாத்தியமற்ற செயல்களைச் செய்தார். அவர் கடவுளின் அவதாரம்’ என்று கூறினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!
பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!