டிடிவி தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி - தொடர்ந்து எதிர்க்கும் ஒபிஎஸ் தரப்பு...! 

First Published Oct 15, 2017, 4:46 PM IST
Highlights
The Dinakaran is a fraudulent phenomenon in the election commission said KP Mununasamy of the Opposition.


தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மை எனவும் டிடிவி தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி எனவும் ஒபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி இரட்டை இலையை உரிமை கொண்டாடுவது கேலிகூத்தாக உள்ளது எனவும் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே எந்தவித மன கசப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். 

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் பலத்த போட்டி நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் இரட்டை இலை சின்னம் யாருக்கு என தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எடப்பாடி பன்னீர் அணியினர் இரட்டை இலை கண்டிப்பாக எங்களுக்கே கிடைக்கும் என பேட்டி அளித்து வருகின்றனர். ஆனால் டிடிவி தரப்பு எப்படி விசாரணையையும் தீர்ப்பையும் தள்ளிப்போடலாம் ஆலோசித்து வருகின்றனர். 

இதனிடையே ஒபிஎஸ்க்கும் இபிஎஸ்க்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனாலேயே பன்னீர் தனியாக சென்று மோடியிடம் புகார் தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒபிஎஸ் தரப்பின் கே.பி.முனுசாமி, தேர்தல் ஆணையத்தில் நாங்கள் கொடுத்துள்ள ஆவணங்கள் உண்மை எனவும் டிடிவி தினகரன் ஒரு ஏமாற்று பேர்வழி எனவும் தெரிவித்தார். 

மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி இரட்டை இலையை உரிமை கொண்டாடுவது கேலிகூத்தாக உள்ளது எனவும் ஒபிஎஸ் இபிஎஸ் இடையே எந்தவித மன கசப்பும் இல்லை எனவும் தெரிவித்தார். 

click me!