’அப்பா பெயர் தெரியலையே...’ஹெச்.ராஜாவுக்கு வந்த சோதனை..!

Published : May 18, 2019, 04:25 PM IST
’அப்பா பெயர் தெரியலையே...’ஹெச்.ராஜாவுக்கு வந்த சோதனை..!

சுருக்கம்

வடமாநிலத்தை சேர்ந்தவர் என்கிற பேச்சு பரவலாக இருப்பதால் தனது பூர்வீகம் பாட்டன், தாத்தா பெயர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா.  

வடமாநிலத்தை சேர்ந்தவர் என்கிற பேச்சு பரவலாக இருப்பதால் தனது பூர்வீகம் பாட்டன், தாத்தா பெயர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா. ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜாவிடம் நெட்டிசன் ஒருவர், ‘சார் நீங்க ஒரு வடமாநிலத்தை சேர்ந்தவரா?’ என கேள்வி எழுப்பி இருந்தார்.  அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா 

’’ஏற்கனவே பலமுறை கூறியுள்ளேன். எனக்கு தஞ்சை அகரமாங்குடி பூர்வீகம். பக்கத்து ஊர் மெலட்டூரில் பிறந்தவன். கோவத்தகுடி தெண்ணாயிர ஐயனார் என் குலதெய்வம். என் பாட்டனார் பெயர் சிவசிதம்பரம் அவரது தந்தை பெயர் விருத்தாஜலேஸ்வரர் இப்பெயர்கள் வெளிமாநிலத்தில் உண்டா? பல முட்டாள்கள் பொய் பரப்புகின்றனர்’’எனத் தெரிவித்துள்ளார். 

 

’அப்போ நீங்க சிவகங்கை இல்லயா’ என ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, ’’நான் 45 நாட்கள் குழந்தையாக இருந்த போது என் தகப்பனார் காரைக்குடி அழகப்பா உடற்பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். எனவே அன்றைய தினம் முதல் காரைக்குடிவாசி. ஆரம்பக்கல்வி முதல் ஆடிட்டர் வரை படித்ததும் ஆடிட்டர் தொழில் அரசியல் பணி அனைத்தும் சிவகங்கை மாவட்டத்தில் தான். ஆமாம் இந்த ஈ.வெ.ரா கும்பலே முட்டாள்கள் தானோ? என் பாட்டனாரின் அப்பா பெயர் விருத்தாஜலேஸ்வரர்னு சொன்னால் என் initial எப்படி எச் என்று ஒருத்தர் கேட்கிறார். பலரும் இது போன்ற நபர்களுக்கு ஏன் பதில் சொல்கிறீர்கள் என்று கேட்கின்றனர். அந்நிய பெயரை வெட்கமே இல்லாமல் வைத்திருப்பவரைexpose செய்ய...’ எனக் கோபப்பட்டுள்ளார். 

 

அதற்கு கமெண்ட் போட்டுள்ள ஒருவர், ‘’சர்மா கடைசி வரைக்கும் உங்க அப்பா பெயர் சொல்லவே இல்ல. .தெரியலையா? இல்ல மறந்துட்டியா? எனக் கேட்டு ஹெச்.ராஜாவை கண் சிவக்க வைத்துள்ளார். 

 


 

PREV
click me!

Recommended Stories

அமைச்சரின் இலாகா தெரியாமல் பேசுகிறார் அண்ணாமலை..! ஊராட்சி செயலாளர் பணியில் மோசடி இல்லை..! அடித்துச் சொல்லும் அதிகாரிகள்..!
தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் டார்கெட்.. லாலி பாடும் திமுக அரசு.. இபிஎஸ் ஆவேசம்!