நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை.. கொஞ்சம் கூட கவலை வேண்டாம்.. அமைச்சர் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Jun 12, 2021, 11:23 AM IST
Highlights

தமிழகத்திற்கு கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அச்சப்பட தேவையில்லை அதை எதிர்கொள்ள அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அச்சப்பட தேவையில்லை அதை எதிர்கொள்ள அனைத்து வகையான கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தடுப்பூசி மருந்து சேமிப்புக் கிடங்கை ஆய்வு செய்த அவர் இவ்வாறு கூறினார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் உச்சமடைந்து தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நோய்தொற்று கட்டுக்குள் வந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை,  எனவே உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைப்பதற்கு தொடர்பாக மருத்துவக் குழுவுடன் தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தடுப்பூசி மருந்துகள் சேமிப்புக் கிடங்களுக்கு கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ்விடத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு நடத்தினார். அப்போது செய்தியாளரிடம் கூறிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, தமிழகத்தில் ஏறத்தாழ 50,000 படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது,  தடுப்பூசி போடுவதில் அவசரம் காட்ட முடியாது,  அதை மெதுவாகத்தான் செய்ய வேண்டும், இதை மனதில் வைத்துதான் ஒருவேளை தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கொரோடா தடுப்பூசி  பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என விமர்சித்துள்ளார் என தெரிகிறது. 

தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில வாரியாக அதை பிரித்து அனுப்புவோம்  என மத்திய அரசு கூறியிருக்கிறது. தற்போதைய சூழலில் மூன்றாவது அலை வரக்கூடும் என கூறப்படுகிறது, ஆனால் மூன்றாவது அலை வந்தாலும் அது குறித்து கவலைப்பட தேவை இல்லை, தற்போது அரசு மருத்துவமனைகள் முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்திலும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இங்கிலாந்தில் மூன்றாவது அலை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது, இங்கிலாந்தில் வந்தால் தமிழகத்தில் நவம்பர் டிசம்பர் மாதங்கள் மூன்றாவது அலை வரும் என கூறப்படுகிறது. இதுவரை 1,299 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

 

click me!