பூட்டப்பட்ட வீட்டிற்குள் காதல் தம்பதி எடுத்த பயங்கர முடிவு.. கதவை உடைத்து உள்ளே நுழைந்த காக்கிகள் அதிர்ச்சி..!

Published : Dec 16, 2020, 02:51 PM IST
பூட்டப்பட்ட வீட்டிற்குள் காதல் தம்பதி எடுத்த பயங்கர முடிவு.. கதவை உடைத்து உள்ளே நுழைந்த காக்கிகள் அதிர்ச்சி..!

சுருக்கம்

இதனையடுத்து போலீசார் கதலை உடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மகா வைகுண்டமும் கரி சூல்தாலும் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தொல்லையா ?கந்துவட்டி பிரட்சனைய ?  அல்லது குழந்தை இல்லாத காரணமா? என தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் கோட்டார் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள இடலாக்குடி பைத் மால் நகரை சேர்ந்தவர் மகா வைகுண்டம் (25) இவரது மனைவி கரி சூல்த்தால் (23)  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மகா வைகுண்டம் தொழில் ரீதியாக நாகர்கோவில் தங்கி வசித்து வருகிறார் - சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் இடலாக்குடியிலுள்ள அவர்களது வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

இதனையடுத்து போலீசார் கதலை உடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மகா வைகுண்டமும் கரி சூல்தாலும் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்கள் தற்கொலைக்கு குழந்தை இன்மை காரணமாக ? கடன் தொல்லையா ? கந்துவட்டி பிரட்சனைய ?என்ற கோணங்களில் கோட்டார் போலீசார் விசாரணை செய்து வருகின்றர்.  இளம் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

விடாத அஜிதா ஆக்னஸ்.. தவெக அலுவலகம் முன்பு தர்ணா.. 'விஜய் பேசாமல் நகர மாட்டேன்'.. பரபரப்பு!
விஜய் இஸ் தி ஸ்பாய்லர்..! தவெக கூட்டணிக்கு வராததால் பியூஸ் கோயல் ஆத்திரம்..!