அணிகள் இணைப்பில் மீண்டும் பின்னடைவு! தினகரன் கைதாகும் வரை குழப்பம்தான்...!!!

First Published Apr 25, 2017, 9:28 AM IST
Highlights
confused until it Dinakaran is gets arrested The teams are backlit back to the link


டெல்லி போலீசாரின் விசாரணைக்கு ஆளாகியுள்ள தினகரன் கைதாகும் வரை, அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராது என்றே சொல்லப்படுகிறது.

பன்னீர் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, எடப்பாடி தரப்பில் அமைக்கப்பட்ட  குழுவின் தலைவர் வைத்திலிங்கம், அதற்குள் ஒரு உப குழுவை அமைத்துள்ளார்.

அந்த உப குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயகுமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவில் உடன்பாடு இல்லாத தங்கமணி, எடப்பாடி டெல்லியில் இருந்து வந்ததும், உபகுழுவுக்கு ஒப்புதல் பெற்று அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று வைத்திலிங்கத்திடம் கூறி உள்ளார்.

ஆனால், ஏற்கனவே, பன்னீர் தரப்பிடம் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று தேதி குறித்த பின்னர், தள்ளி போட்டால், அவர்கள் நம்மை தவறாக நினைக்க கூடும் என்று வைத்திலிங்கம் கூறி இருக்கிறார்.

ஆனால், அவர் அதை ஏற்பதாக இல்லை. எதற்கும் ஒரு வார்த்தை எடப்பாடியிடம் சொல்லி விடலாம் என்பதிலேயே தங்கமணி  கவனமாக இருந்தார்.

மேலும், அதற்காக கவலைப்பட வேண்டாம், நான் பன்னீர் தரப்பிடம் பேசுகிறேன் என்று தங்கமணி கூறி இருக்கிறார். அது போலவே, முனுசாமியிடம் பேசி விவரத்தை சொல்லி இருக்கிறார் தங்கமணி.

அதன் பின்னர், எடப்பாடியுடன் ஆலோசனை நடத்தியதில், தினகரன் கைதாவாரா? இல்லை என்பது இதுவரை தெரியவில்லை.

அவர் கைதானால், பன்னீர் தரப்பு முன் வைக்கும் நிபந்தனையான, சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு நீக்குவது எளிதாக இருக்கும். 

அப்படி இல்லை என்றால், தினகரன் ஆதரவாளர்கள் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டுதான் இருப்பார்கள் என்று முதல்வர் எடப்பாடி கூறி இருக்கிறார்.

அதன் பிறகே, இரு அணிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே, அணிகள் இணைப்பு விஷயம் தாமதம் ஆவதற்கு தினகரனே காரணம் என்பதை சொல்லாமல் சொல்கிறது எடப்பாடி அணி. 

click me!