போர் வரும்போது மட்டுமே பேசுவார் ரஜினி... - மெர்சல் காட்டும் சீமான்...!

 
Published : Oct 22, 2017, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
போர் வரும்போது மட்டுமே பேசுவார் ரஜினி... - மெர்சல் காட்டும் சீமான்...!

சுருக்கம்

The Tamil partys Seeman has criticized actor Rajinikanth for not talking about Mersal and he will speak only when he comes to war.

நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் குறித்து பேசமாட்டார் எனவும் அவர் போர் வரும்போது மட்டுமே பேசுவார் எனவும் நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்துள்ளார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மெர்சல். இப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகியது. 

தற்போது பல்வேறு வசூல் சாதனைகளையும் இப்படம் படைத்து வருகிறது. இந்த படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். 

பாஜகவின் இத்தகைய கருத்திற்கு அரசியல், திரையுலகினர் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெர்சல் படப்பிரச்சனையில் கருத்து தெரிவிக்காத ரஜினிக்கு வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெர்சல் படத்துக்கு தமிழ்த்திரையுலகம் ஆதரவு தெரிவித்துள்ளநிலையில், ரஜினி மட்டும் வாய் திறக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுகையில், நடிகர் ரஜினிகாந்த் மெர்சல் குறித்து பேசமாட்டார் எனவும் அவர் போர் வரும்போது மட்டுமே பேசுவார் எனவும்  விமர்சித்துள்ளார். 

மேலும் தான் தமிழினம் பேசினால் விமர்சனம் செய்பவர்கள் கர்நாடகாவில் படம் திரையிடப்பட விடாமல் தடுப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!