
அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பள்ளி முதல்வர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பள்ளி பாடத்திட்டங்கள், செயல்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவர்கள் 5 மரக்கன்றுகளை நட்டால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் பாடத்திட்டம் மாற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், நவம்பர் இறுதிக்குள் வரைவு பாடத்திட்டம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
வரைவு பாடத்திட்டம் தொடர்பாக 15 நாள் வரை மக்கள் கருத்து கூறலாம் என்றும் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு இம்மாத இறுதிக்குள் 500 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.