ஏழு மாசத்துல எத்தனை கோப்புல முதல்வர் கையெழுத்து போட்டுருக்காருனு தெரியுமா? அடேங்கப்பா.. இத்தனையா?

Asianet News Tamil  
Published : Oct 05, 2017, 06:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
ஏழு மாசத்துல எத்தனை கோப்புல முதல்வர் கையெழுத்து போட்டுருக்காருனு தெரியுமா? அடேங்கப்பா.. இத்தனையா?

சுருக்கம்

chief minister palanisamy performance

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழக அரசு சரியாக செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது எனவும் ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கும் ஆட்சியாளர்கள் முறையாக ஆட்சி செய்யவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்/

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து தலைமை செயலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில்தான் முதல்வராக பொறுப்பேற்றது முதல் எடப்பாடி பழனிசாமி 3563 கோப்புகளில் கையெழுத்து போட்டிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

உள்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என முக்கிய துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் முதல்வர் பழனிசாமி. அவற்றில்,  நெடுஞ்சாலை துறையில் அதிகபட்சமாக 2017 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். உள்துறையில் 714 கோப்புகளில் கையெழுத்து போட்டு ஒப்புதல் வழங்கியுள்ளார். பொதுப்பணித்துறையில் 515 கோப்புகளைப் பார்த்து கையெழுத்து போட்டிருக்கிறார். 

அமைச்சர் செங்கோட்டையன் 62 கோப்புகளிலும் ஜெயக்குமார் 53 கோப்புகளிலும் கையெழுத்திட்டுள்ளனர். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்  95 கோப்புகளைச் சரிபார்த்து கையெழுத்து போட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2 நாட்களில் 144 கோப்புகளைச் சரிபார்த்து கையெழுத்திட்டிருக்கிறார்.


ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது தொடர்பாக சர்ச்சைக்கு ஆளான அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் 2 நாளில் 126 பைல்கள் பார்த்துள்ளார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, மணிகண்டன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் குறைவான கோப்புகளையே பார்த்துள்ளனர் என தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!