
நீட் எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் 9363109303, 9994211705, 8903455757, 7373855503 போன் நம்பரோடு அறிக்கை வெளியிட்டு களத்தில் இறங்கியுள்ளார்.
இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இப்படி செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு பெரிய அளவில் கஷ்டத்தை ஏற்படுத்தும்.
சிபிஎஸ்இ அறிவிப்பிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், இதில் சிபிஎஸ்இக்கு எதிராக தீர்ப்பு வந்தது. ஆனால் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது.
தற்போது இதில் சிபிஎஸ்இ பிறப்பித்த உத்தரவு சரிதான், நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில்தான் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கடைசி நேர மாற்றம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நீட் எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார். கேரளாவில் உள்ள 10 மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் உதவ செய்ய தயார்.பயண செலவு, தங்கும் வசதி செய்து தரப்படும். தேர்வு மையத்தை அடையாளம் காணவும் வழிகாட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது டிவிட்டில் ''கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றுள்ளார். மேலும் மக்களுக்கு தொடர்பு கொள்ள 4 பேரின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது