அக்கினிச் சட்டியில் இருந்து பிறந்தோம்கிற கதை... மொத்த வன்முறைக்கும் கருப்பொருள்... திமிறியடிக்கும் திருமா.!

Published : Nov 25, 2021, 03:56 PM IST
அக்கினிச் சட்டியில் இருந்து பிறந்தோம்கிற கதை...  மொத்த வன்முறைக்கும்  கருப்பொருள்...  திமிறியடிக்கும் திருமா.!

சுருக்கம்

 ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவை இன்னும் ஆண்டு கொண்டு இருக்கிறது. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

எல்லா வன்முறைகளுக்கும் ராமாயணமும், மகாபாரதமுமே அடிப்படையாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

’’இந்தியா என்பதை பாரத் என மாற்றி வைத்தார். ஏனென்றால் அவருக்கு ராமாயணம், பாரதம் என்பதில் எல்லாம் உடன்பாடு கிடையாது. அந்தக்கருத்துகளை அவர் ஏற்றுக் கொள்ளக்கூடியவர் அல்ல. 

அவரது குடும்பத்தில் ராமாயணத்தில் வரக்கூடிய பெயர்கள் இருக்கிறது. அவரது அண்ணன் பெயர் பலராமன். இவர் பெயரே பீமா ராவ் தான். பாரதத்தில் வரக்கூடிய பீமன். ராமா பாய், ராம்ஜி, ராம், இப்படி அவரது குடும்பத்தில் பெயர் இருக்கிறது. இந்தியா முழுவதும் பாரதம் ராமாயணத்தை தழுவி ஏராளமானோர் பெயர் வைத்துள்ளனர். எங்க அப்பா பெயர் ராமசாமி. தொல்காப்பியன் என மாற்றினேன். பெரியார் பெயர் ராமசாமி.

 

இப்படி ராமாயணத்தை, மகாபாரதத்தை தழுவி ஏராளமான பெயர்கள் உண்டு. அதைத் தழுவித்தான் நாங்கள் அக்கினிச்சட்டியில் இருந்து பிறந்தோம் என்கிறார்களே. அங்கிருந்து தான் அந்தக் கதையும் வருகிறது. திரெளபதி அக்கினிசட்டியில் யாகத்தில் இருந்து தான் வெளியே வருகிறார். ராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவை இன்னும் ஆண்டு கொண்டு இருக்கிறது. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த ரெண்டு நூல்களும் வரலாற்றுக்காண கருப்பொருளாக இருக்கிறது. ஆட்சி அதிகாரத்திற்கான கருப்பொருளாகவும் இருக்கிறது. கலாச்சரத்திற்கான மையப்பொருளாகவும் இருக்கிறது. 

 

எல்லா வன்முறைகளுக்கும் அதுவே அடிப்படையாக இருக்கிறது. எழுதப்படிக்க தெரியாது. பள்ளிக்கூடம் போயிருக்க மாட்டான். ஆனால் ராமாயணம் தெரியாதவன் எவனுமே இல்லை இந்தியாவில். ராமாணத்தில் வரும் ஒன்று, இரண்டு கதையாவது சொல்வான் ராமாயணத்தைப்பற்றி. ராமாயணமும், மகாபாரதமும் மக்களின் உள்ளத்திலே விதைக்கப்பட்டது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி