இந்து கடவுளர்களின் கதைகள் கொச்சையாக, அருவருப்பாக இருப்பதால் ஆதிபராசக்தி அவதாரம் ஒன்றுமில்லை... வன்னிஅரசு..!

Published : Dec 27, 2021, 03:31 PM IST
இந்து கடவுளர்களின் கதைகள் கொச்சையாக, அருவருப்பாக இருப்பதால் ஆதிபராசக்தி அவதாரம் ஒன்றுமில்லை...  வன்னிஅரசு..!

சுருக்கம்

அன்னபூரணி எனும் பெண்மணி ஆதிபராசக்தி அவதாரம் எடுத்துள்ளதை மோசமாக-கொச்சையாக விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.

இந்து கடவுளர்களின் கதைகள் எவ்வளவு கொச்சையாகவும் அருவருப்பாகவும் இருப்பதை புரிந்து கொண்டால் ஆதிபராசக்தி அவதாரம் ஒன்றுமில்லை என விசிக துணைபொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். 

அன்னப்பூரணி அரசு அம்மா' என்ற சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகிக் கொண்டிருந்த பெண் சாமியார் ஒருவரின் காணொளிகள் சமீபத்தில் கவனம் ஈர்த்தன. பளபள புடவை, லைட் மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் சினிமா அம்மன் போன்று காரிலிருந்து இறங்கி நடந்து வரும் பெண்ணுக்கு கூலிக்கு பூ, பன்னீர் தூவுகின்றது ஒரு கூட்டம். தன்னை அம்மனாகவே நினைத்துக் கொண்டு தான் கூட்டி வந்த கூட்டத்திற்கு அருள்பாலிக்கிறார் அன்னபூரணி. பக்தி பரவசத்தில் தன்னிலை மறந்து அனைவருக்கும் கைகளை உயர்த்தி ஆசிர்வாதம் வழங்குகிறார்.  

 ஒரு இளம்பெண் அன்னபூரணியின் பாதத்திற்கு அடியில் படுத்துக்கொண்டு 'அம்மா, அம்மா எங்க அம்மா' என்று கதறுகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. செங்கல்பட்டில் எழுந்தருளி இருப்பதாக தன்னை தானே சொல்லிக்கொள்ளும் அன்னபூரணி அரசு தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் என்று அறிவித்துள்ளார். அன்னபூரணி செங்கல்பட்டில் மடம் ஒன்றை தொடங்கி உள்ளார். சின்ன மடம் வைத்து இருக்கும் இவர் அருகே இருக்கும் கல்யாண மண்டபத்தை பிடித்து அங்கு பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி வருகிறார். இங்கு கூட்டம் கூட்டமாக கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து அருள்வாக்கு வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

அருள் வாக்கு எங்கிருந்து எல்லாமோ அன்னபூரணியை சந்திக்க பலர் வருவதாக அவரின் பக்தர்கள் சொல்கிறார்கள். பல நோயாளிகள் தீராத நோய்களோடு வந்து, அன்னபூரணியிடம் அருள்வாக்கு பெற்றதும் குணமடைந்து வீட்டிற்கு சென்றதாக அவரின் பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். மாரடைப்பு தொடங்கி பல பாதிப்புகள், நோய்களை இவர் குணப்படுத்தி உள்ளதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் சொல்வதெல்லாம் உண்மையில் அன்னபூரணி கலந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அன்னபூரணி தனது எதிர்வீட்டில் இருக்கும் லட்சுமி என்ற பெண்ணின் கணவர் அரசு என்பவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. 

அன்னபூரணி அப்போது ஷங்கர் என்ற தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த பிரச்சனை வெளியே வந்த நிலையில், கணவர் ஷங்கரை பிரிந்துவிட்டு எதிர்வீட்டு லட்சுமியின் கணவர் அரசுடன் அன்னபூரணி தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இதைத்தான் தனியார் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் விவாதித்து உள்ளனர். நடிகை லட்சுமி ராமகிருஷ்னன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

 

அரசு இதில் லட்சுமியின் மனைவி அரசுவுடன்தான் தான் இருப்பேன் என்று அன்னபூரணி விடாப்பிடியாக குறிப்பிட்டு இருந்தார். இப்போது திடீரென அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவர் தலைமறைவாகி இருக்கிறார். அவரது செல்போன் அனைத்தும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார் அன்னபூரணி. 

 

இந்நிலையில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’அன்னபூரணி எனும் பெண்மணி ஆதிபராசக்தி அவதாரம் எடுத்துள்ளதை மோசமாக-கொச்சையாக விமர்சிப்பதை பார்க்க முடிகிறது. இதில் கொச்சைப்படுத்துதல் எங்கே வந்தது?ஏனென்றால், இந்து கடவுளர்களின் கதைகள் எவ்வளவு கொச்சையாகவும் அருவருப்பாகவும் இருப்பதை புரிந்து கொண்டால் ஆதிபராசக்தி அவதாரம் ஒன்றுமில்லை’’ எனத் தெரிவித்துள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!