மனு சாஸ்திரத்தை தொட்டால் காவி கும்பலுக்கு ஆத்திரம் வருகிறது. திருமா மீது பொய் பிரச்சாரம்-மக்கள் அதிகாரம்..

Published : Oct 24, 2020, 10:08 AM IST
மனு சாஸ்திரத்தை தொட்டால் காவி கும்பலுக்கு ஆத்திரம் வருகிறது. திருமா மீது பொய் பிரச்சாரம்-மக்கள் அதிகாரம்..

சுருக்கம்

திருமாவளவன் அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையினால் ஆத்திரமடைந்த காவி கும்பல் அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை என்பது தெரிந்தே அவதூறுகளை வீசி வருகிறது. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மனுசாஸ்திரத்தை தடை செய்ய வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தமிழகம் முழுவதும் பங்கேற்கும் என  மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் அறிவிப்பு செய்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது.  

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தோழர் திருமாவளவன் அவர்கள் மனுசாஸ்திரம் குறித்து ஆற்றிய உரையினால் ஆத்திரமடைந்த காவி கும்பல் அவர் எவ்வகையிலும் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை என்பது தெரிந்தே அவதூறுகளை வீசி வருகிறது. இது அவர்களின் வழக்கமான பாணியாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. 

பெண்களை மிக இழிவாகப் பேசுவதும் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதும் பிஜேபி - ஆர் .எஸ். எஸ் கும்பல் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஹத்ராஸ் படுகொலை நிகழ்வில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கைப் போட்ட  இந்த காவி பாசிஸ்டுகளுக்கு தோழர் திருமாவளவனை பற்றி பேசுவதற்கு கொஞ்சமும் அருகதை இல்லை. 

விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னெடுத்து இருக்கிற இந்த மனு சாஸ்திரத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு நடைபெறுகிற இந்த  போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்  அனைத்து இடங்களிலும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Breaking News: மஃப்டியில் வந்த அமைச்சர்.! ரூ.4,000 மாமூல் கேட்ட அர்ச்சகர்கள் - திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு.!