இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு.. வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆளுங்கட்சி.. H.ராஜா பகீர்

Published : Feb 11, 2022, 10:46 AM IST
இதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு.. வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆளுங்கட்சி.. H.ராஜா பகீர்

சுருக்கம்

ஏனென்றால் 2007ஆம் வருடம் திமுகவின் தூண்டுதலின் பேரில் தமிழகம் முழுவதும் பிஜேபி மற்றும் ஹிந்து அமைப்புகளுடைய அலுவலகங்கள் தாக்கப்பட்டன. அதற்கு முந்தைய நாள் எனது வீடு கூட தாக்கப்பட்டது. நேற்றைய தினமும் அதே சமயத்தில் பாஜகவினுடைய வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது. ஆகவே இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டிருப்பது போல NIA மூலம் விசாரிப்பதன் மூலமே எண்மையை வெளிக் கொண்டுவர முடியும் என எச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நந்தனத்தை சேர்ந்த ரவுடி கர்த்தா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தீவிரமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டதில் நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். ஆனால், இது ஏற்புடையது அல்ல என எச்.ராஜா கூறியுள்ளார். 

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், தேசிய தலைவருமான எச்.ராஜா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கமலாலயத்தில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும் . ஆனால் இதில் அதிர்ச்சியளிக்கின்ற விஷயம் என்னவென்று சொன்னால் FIR பதிவு செய்வதற்கு முன் முன்பாகவே தடயங்களை காவல்துறையினரே நேரடியாக வந்து இரவே அழித்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய கண்டனத்திற்குரிய விஷயம். 

ஏனென்றால் 2007ஆம் வருடம் திமுகவின் தூண்டுதலின் பேரில் தமிழகம் முழுவதும் பிஜேபி மற்றும் ஹிந்து அமைப்புகளுடைய அலுவலகங்கள் தாக்கப்பட்டன. அதற்கு முந்தைய நாள் எனது வீடு கூட தாக்கப்பட்டது. நேற்றைய தினமும் அதே சமயத்தில் பாஜகவினுடைய வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது. ஆகவே இதை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியவில்லை மேலும் காவல்துறை கமிஷனருடைய அறிக்கையானது இது ஏதோ நீட்டுக்கு எதிராக ஒரு நபர் செய்ததுபோல அவர்கள் அறிக்கை தந்திருக்கிறார்கள்.

இது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் ஆளும் கட்சியே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறதாகவே நான் உணர்கிறேன். மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டிருப்பது போல NIA மூலம் விசாரிப்பதன் மூலமே இதை வெளிக் கொண்டுவர உதவும் எனவே இந்த வழக்கினை NIA கையில் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!