ஆளுங்கட்சி ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை ஒடுக்க வேண்டும்.. அதிமுக எம்எல்ஏக்கள் கலெக்டரிடம் புகார்

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2021, 10:14 AM IST
Highlights

மதுரையில் கொசுக்கள் உற்பத்தி பெருகி உள்ளது. அதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ஆளுங்கட்சி ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை மாவட்ட  நிர்வாகம், காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு தடுப்பூசி, நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டப்படுகிறதோ என அச்சம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மதுரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், அய்யப்பன் ஆகியோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில், மதுரை மாநகர் மற்றும் கிராமப்பகுதிகள் ஒவ்வொரு வீட்டிலும் காய்ச்சல் கண்டறியப்பட வேண்டும், கபசுர குடிநீர், மருந்துள், சத்து மாத்திரைகளை வழங்க வேண்டும். கொரானா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும். மளிகை பொருட்களை தாராளமாகவும், மலிவு விலையிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் கொசுக்கள் உற்பத்தி பெருகி உள்ளது. அதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும். ஆளுங்கட்சி ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை மாவட்ட  நிர்வாகம், காவல்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். 

அதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன்செல்லப்பா ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி அளித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசியதாவது, கொரானா தொற்றால் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என தமிழக முதல்வர் சத்திய பிராமணம் போல கூறினார். ஆனால் தமிழகத்தில் கள நிலவரம் மாறாக உள்ளது. முன்களப்பணியாளர்களின் தியாக பணியால் கொரானா தொற்று குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. தமிழகத்தில் கொரானா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். 

அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை அதிகமாக செய்தோம். எங்கள் ஆட்சியில் பாதிப்பு குறைவாக இருக்கும் போதே அதிகளவு பரிசோதனைகளை செய்தோம். 1லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்டோம். தற்போது கொரானா பரிசோதனை எண்ணிக்கை அதே அளவில் உள்ளது. அதனை 3லட்சமாக உயர்த்த வேண்டும். அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை ரிசல்ட் 24 மணி நேரத்தில் கிடைத்தது. ஆனால் தற்போது கொரானா ரிசல்ட் கிடைக்க 3நாள் ஆகிறது. ரிசல்ட் கிடைக்க காலதாமதம் ஆகுவதால் கொரானா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை செய்தவரை தனிமைப்படுத்தும் நடைமுறையை தற்போதும் கடைப்பிடிக்க வேண்டும். கிரமங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும்.

தமிழகத்தின் கள நிலவரமும் அரசு தெரிவிக்கும் விவரமும் வேறு வேறாக உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளை தேவையான அளவு உருவாக்க வேண்டும். தற்போது அசாதாரண சூழ்நிலை உள்ளதால் கொரோனா மரணத்தை அரசு வெளிப்படையாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரானா இறுதி சடங்கில் அரசு பாதுகாப்பு வழிமுறைகள் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் எதிர்ப்பார்பு கோரிக்கையை, வேண்டுகோளை அரசுக்கு கொண்டு வருவது தான் எதிர்க்கட்சியின் இலக்கணம். முந்தைய அரசின் நடவடிக்கை காரணமாக, விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி குறித்து தற்போது இளைஞர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  தடுப்பூசி மையங்களில் கட்டுங்கடங்காத கூட்டம் உள்ளதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிக்கு தமிழக அரசு தடுப்பூசிகள் வழங்குவதில், நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!