திமுக அரசுக்கு எதிராக அதிமுக நாளை போராட்டம்..! திடீரென ஒத்திவைத்த எடப்பாடி..?

By Ajmal KhanFirst Published Dec 12, 2022, 2:35 PM IST
Highlights

தி.மு.க. அரசைக் கண்டித்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டு 21.12.2022 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. 

திமுகவிற்கு எதிராக போராட்டம்

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெற இருந்த போராட்டங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைக்கும் செயல்களில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வரும் விடியா தி.மு.க. அரசைக் கண்டித்து, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13.12.2022 அன்று கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில்,

எனக்கு எதிராக டுவிட் போடும் பெண் நிர்வாகி..! துபாய் சென்றது ஏன்..? யாரை சந்தித்தார்..? ஆதாரம் உள்ளது- அண்ணாமலை

போராட்டத்தை ஒத்திவைத்த அதிமுக

சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளூர்,வேலூர், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,கிருஷ்ணகிரி மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய இருப்பதாகக் கிடைத்த தகவலையொட்டி, மேற்கண்ட மாவட்டங்களுக்கு மட்டும் 13.12.2022 அன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதற்கு பதிலாக வருகின்ற 21.12.2022 - புதன் கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, அனைத்து ஒன்றியங்களிலும் 14.12.2022 அன்றும்; ஒத்திவைக்கப்பட்ட பேரூராட்சிகளில் 16.12.2022 அன்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

மாண்டஸ் புயலால் சாதரண காற்று,மழை தான் ! மக்களை காப்பாற்றியது போல் பில்டப் செய்யும் ஸ்டாலின்.? இபிஎஸ் ஆவேசம்

click me!