காங்கிரசின் சொத்து. பிரியங்காவுக்கு சொந்தமானதல்ல . புயலை கிளப்பும் உசேன் ஓவியம்..!!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2020, 9:27 AM IST
Highlights

 ரானா கபூரிடம், மிகவும் விலை உயர்த்த, 44 ஓவியங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஓவியம், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, 2 கோடி ரூபாய்க்கு, ரானா கபூருக்கு விற்றது என, தெரிய வந்திருக்கிறது. இந்த ஓவியம், மறைந்த ஓவியர், எம்.எப். உசேனால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை, பிரியங்காவின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்திக்கு 1985ல், உசேன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

 T.Balamurukan

காங்கிரஸ் நுாற்றாண்டு விழாவில், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராஜிவ்காந்திக்கு, உசேன் வழங்கியுள்ளார். அது காங்கிரசின் சொத்து. பிரியங்காவுக்கு சொந்தமானதல்ல. இந்த விவகாரம் பற்றி, முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என  பாஜ., செய்திதொடர்பாளர், சம்பித் பாத்ரா  அடுத்த புயலை கிளப்பியிருக்கிறார்.

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் பெரிய வங்கியாக திகழ்ந்து வந்த "யெஸ் வங்கி" கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. 'யெஸ் வங்கி ' நிறுவனர் ரானா கபூரிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அதில், ரானா கபூரிடம், மிகவும் விலை உயர்த்த, 44 ஓவியங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு ஓவியம், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, 2 கோடி ரூபாய்க்கு, ரானா கபூருக்கு விற்றது என, தெரிய வந்திருக்கிறது. இந்த ஓவியம், மறைந்த ஓவியர், எம்.எப். உசேனால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை, பிரியங்காவின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்திக்கு 1985ல், உசேன் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி, பாஜ., செய்திதொடர்பாளர், சம்பித் பாத்ரா, டெல்லியில் பேசும் போது.., "ஓவியங்களுக்கு உசேன் புகழ் பெற்றது போல், ஊழலுக்கு புகழ் பெற்றது காங்கிரஸ். ஊழல் ஒரு கலை என்றால், அதை உருவாக்கிய கலைஞன் காங்கிரஸ்.இந்த ஓவியத்தை, காங்கிரஸ் நுாற்றாண்டு விழாவில், காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராஜிவ்காந்திக்கு, உசேன் வழங்கியுள்ளார். அது காங்கிரசின் சொத்து. பிரியங்காவுக்கு சொந்தமானதல்ல. இந்த விவகாரம் பற்றி, முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

click me!