
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நாளை தமிழகம் வர உள்ளார். அவரை வரவேற்க அதிமுக-பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தீவிர ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளன. பிரதமரின் வருகையால் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதிமுக- திமுக என்ற இரு கட்சியினரும் வீதிவீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, கடுமையாக எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறது. அது அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் தமிழகம் மற்றும் புதுவையில் முகாமிட்டு அதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்த முறை இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்காக பாஜக முன்னணி மூத்த தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நாளை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் அதில் கலந்து கொள்ள உள்ளனர். நாளை காலை 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர். 11:30 மணிக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வேட்பாளர் எல். முருகன் உட்பட 13 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரதமர் உரையாற்ற உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் பிரச்சாரத்திற்காக வரவுள்ள நிலையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பிரச்சாரத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடியின் உரை முக்கியத்துவத் வாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.