திமுகவை கதிகலங்க வைத்த போஸ்டர்.. மீண்டும் பூதாகரமாகிறது முரசொலி மூலபத்திர சர்ச்சை.. தூக்கம் தொலைத்த ஸடாலின்.

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2020, 12:47 PM IST
Highlights

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வருவதாக கூறும் திமுக நிர்வாகிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரித்து மோசடி செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையானவராக, நேர்மையானவராக, நீதியை நிலைநாட்டுபவராக, பட்டியலின மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்தால், முரசொலிக்காக அபகரித்த பஞ்சமி நிலத்தை ஒப்படைத்திருப்பார். 

சென்னை, சேலம், மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பஞ்சமி நிலத்தை அபகரித்த முரசொலியின் மூலப் பத்திர நகலை கண்டுபிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்புடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஞ்சமி நிலம் அபகரிப்பு விவகாரம் தொடர்பாக பாமக- அதிமுக இடையே நேரடி காரசார மோதல் ஏற்பட்டது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அலுவலகம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. அதனையடுத்து திமுகவுக்கும்-பாமகவுக்கும்ம் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக அந்த பிரச்சனை ஓய்ந்திருந்த நிலையில், சேலம், சென்னை மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பஞ்சமி நிலத்தை அபகரித்த முரசொலியின் மூல பத்திர நகலை கண்டுபிடித்துக் கொடுத்தால் ஐந்து லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிப்புடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த போஸ்டரை அச்சடித்த ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது: பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் விக்டோரியா மகாராணி மூலமாக சென்னையில் தாழ்த்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்காக பஞ்சமி நிலம் தானமாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலத்தை திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதாவது 48 ஆண்டுகளுக்கு முன்பு மோசடியான உத்தரவு மூலமாக முரசொலி அறக்கட்டளை என்ற பெயரில் நிலம் அபகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் புகார் மனு தரப்பட்டது. பஞ்சமி நிலம் தொடர்பான மூலப் பத்திரத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சி சார்பில் அறிவித்திருக்கின்றோம். விக்டோரியா மகாராணி கொடுத்த நிலம் பட்டியலின மக்களுக்கு சொந்தமானது என திமுகவினருக்கு தெளிவாகத் தெரியும். 

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடி வருவதாக கூறும் திமுக நிர்வாகிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலத்தை அபகரித்து மோசடி செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் உண்மையானவராக, நேர்மையானவராக, நீதியை நிலைநாட்டுபவராக, பட்டியலின மக்களை பாதுகாக்கும் தலைவராக இருந்தால், முரசொலிக்காக அபகரித்த பஞ்சமி நிலத்தை ஒப்படைத்திருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, மாறாக பஞ்சமி நிலத்தை அபகரிக்க பல்வேறு திட்டங்களை ஆர்.எஸ் பாரதி மூலமாக அரங்கேற்றி வருகிறார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பஞ்சமி நில விவகாரத்தில் தலையிட்டு அந்த நிலத்தை மீட்க உதவி செய்ய வேண்டும். திமுக அபகரித்துள்ள நிலம் பட்டியலின மக்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
 

click me!