திமுகவுக்கு குழிவெட்ட வெளி ஆட்கள் தேவையில்லை, திமுகவினரே போதும்... கிரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது...

By Ezhilarasan BabuFirst Published Nov 16, 2020, 12:15 PM IST
Highlights

அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூச்சலிட்டு அலறினார் அந்த சத்தத்தை கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதை அறிந்த திமுக இளைஞரணி முன்னாள் ஊராட்சி அமைப்பாளரும் பிரபல சாராய வியாபாரியான அஜித் என்கிற பாஷா தனது காரில் தப்பி தலைமறைவானார்.
 

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கடத்த முயற்சி செய்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே பட்டப்பகலில் பள்ளி மாணவியை கடத்த முயன்ற திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் சமீபகாலமாக பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. பிரியாணி கடையில் பிரியாணி கேட்டு தகராறு, பியூடிபார்லரில் பெண்ணை அடித்து கொடுமை செய்த சம்பவம் என பல்வேறு சம்பவங்கள் தொடர்கதையாகிவருகின்றன. 

அந்த வரிசையில் பள்ளி மாணவியை திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கடத்த முயன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாட்டூர் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் விவசாய நிலத்தில் வேர்க்கடலை பறித்துக் கொண்டிருந்த தனது தாய்க்கு உணவு கொண்டு  சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை பட்டப்பகலில் மீட்டாளம் பகுதியை சேர்ந்த அஜித் (பாஷா) என்பவர் காரில் கடத்த முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூச்சலிட்டு அலறினார் அந்த சத்தத்தை கேட்டு கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதை அறிந்த திமுக இளைஞரணி முன்னாள் ஊராட்சி அமைப்பாளரும் பிரபல சாராய வியாபாரியான அஜித் என்கிற பாஷா தனது காரில் தப்பி தலைமறைவானார். 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் தாய்  உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளரை கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் வைத்து கைது செய்துள்ளனர். பள்ளி மாணவியை கடத்த முயன்ற வழக்கில் அவர் மீது போக்சோ சட்டம் அமைந்துள்ளது, அதே நேரத்தில் இவர் திருட்டுத்தனமாக கள்ள சாராயம் விற்று வந்த வழக்கில் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டப்பகலில் மாணவியை  கடத்த முயன்று திமுக கட்சி பிரமுகர் கைதாகி இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இவரின் இந்த செயல் திமுகவுக்கு மிகுந்த அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளது.
 

click me!