மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுள்ளு... ஜெர்க்காகும் பாமக ராமதாஸ்..!

Published : Nov 16, 2020, 11:38 AM IST
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுள்ளு... ஜெர்க்காகும் பாமக ராமதாஸ்..!

சுருக்கம்

கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை; திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள்  தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தேக்ம் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தடை செய்யப்பட வேண்டும்; வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கு பதிலாக ஒப்புகைச் சீட்டுகளைத் தான் எண்ண வேண்டும் என்று ஓய்வுபெற்ற தலைலைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ள கருத்துகள் சரியானவை; வரவேற்கத்தக்கவை!

கருத்துக்கணிப்புகள் திரிக்கப்படுபவை; திணிக்கப்படுபவை. ஒரு தரப்புக்கு ஆதரவான கருத்துக் கணிப்புகள்  தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. இதை பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து ஐயங்கள் எழுப்பப்படும் நிலையில், ஒப்புகைச் சீட்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவது ஐயங்களைப் போக்கும். தேர்தல் முடிவுகள் மிகவும் வெளிப்படையாக அமைவதை உறுதி செய்யும்’’எனத் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!