சசிகலா கை காட்டும் நபரே.! அடுத்த முதல்வர்.! பிரபல சோதிடர் சொல்லும் ஆருடம்.!

By T BalamurukanFirst Published Jul 31, 2020, 11:30 PM IST
Highlights

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சசிகலா 4 ஆண்டு சிறைவாசம் கழிந்து வெளியில் வர இருக்கிறார். அதற்கான வேலைகள் ஜரூராக பெங்களுரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் வரும் அக்டோபர் 27-ம் தேதி குருபெயர்ச்சி அடுத்ததாக சனி பெயர்ச்சி என ஆரம்பிக்க இருக்கிறது. அன்று முதல் சசிகலாவுக்கு ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா  கை காட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர அதிக வாய்ப்பு உள்ளது

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சசிகலா 4 ஆண்டு சிறைவாசம் கழிந்து வெளியில் வர இருக்கிறார். அதற்கான வேலைகள் ஜரூராக பெங்களுரில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் வரும் அக்டோபர் 27-ம் தேதி குருபெயர்ச்சி அடுத்ததாக சனி பெயர்ச்சி என ஆரம்பிக்க இருக்கிறது. அன்று முதல் சசிகலாவுக்கு ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம். வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா  கை காட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர அதிக வாய்ப்பு உள்ளது என்று அடித்துச் சொல்லுகிறார் பிரபல சோதிடர் ஷத்குரு.சாந்தகுமார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு அவர் சிறையில் இருக்க வேண்டும்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், கடந்த 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலும் இருந்தார். இரண்டையும் சேர்த்தால், 37 நாட்கள் ஆகிறது. அவரது தண்டனை காலத்தில் இந்த 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும்.மேலும் ஆண்டுக்கு சுமார் ஒரு மாதம் தண்டனை கைதிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

அந்த விடுமுறை, தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டணைக்கு, 4 மாதங்கள் கழிக்கப்படும். இந்த 4 மாத விடுமுறை, ஏற்கனவே சுமார் ஒரு மாதம் சிறையில் இருந்தது என 5 மாதங்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி, சிறை சூப்பிரண்டு, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை கைதிகளுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் வரை தண்டனை காலத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு வேளை சசிகலாவுக்கு சிறை சூப்பிரண்டு இந்த சலுகையை வழங்காவிட்டால், சசிகலா அக்டோபர் மாதம்தான் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது. சிறை சூப்பிரண்டு சலுகையை வழங்கினால், பா.ஜனதா பிரமுகர் வெளியிட்ட கருத்துப்படி அவர் ஆகஸ்டு 14-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது. இந்த கணக்குகளின்படிதான் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று இப்போதே தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழக முதல்வராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சசிகலா விடுதலை தமிழக அரசியலில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.கடந்த 4ஆண்டுகளாக அவரது ஜதக கட்டம் சரியில்லாததால் தான் சிறைவாசம் கணவர் மரணம் எல்லாம் சந்தித்தார். இனி வரக்கூடிய குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி சனி பெயர்ச்சி என அடுத்தடுத்து நிகழக்கூடிய அனைத்து விசயங்களும் நடக்க இருக்கின்றது என பிரபல சோதிடர் ஷத்குரு. சாந்தகுமார் சசிகலா ஜாதகத்தை கணித்து எதிர்காலம் எப்படி என்பதை சொல்லியிருக்கிறார். ஏற்கனவே ஜெயலலிதா இரண்டாவது முறை முதல்வராக பொறுப்பேற்ற போது ஆட்சிக்கட்டில் உட்கார மாட்டார் மருத்துவமனை சிறைசாலையில் தான் இருப்பார் என்று கணித்து சொன்னவர் இவர் என்பது குறிப்பிடத்தக்ககது.
சசிகலா வெளியில் வந்ததும் தமிழக அரசியலில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும்? சசிகலா செல்வாக்கு எப்படி இருக்கும்.? அரசியல் மாற்றம் அவருக்கான அதிகாரம் எப்படி இருக்கும்? என்கிற கேள்விகளை  அவரிடம் முன்வைத்தோம்.


 சசிகலா மீன ராசி ரேவதி நட்சத்திரம் சிம்ம லக்னத்தில் பிறந்தவர். கடந்த 2016-ல் இருந்து இவருக்கு சனி 10-ல் வந்து அமர்ந்தாலே மிகப்பெரிய துன்பத்தை சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் தான்  2016-ல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறைவாசம், கணவர் மரணம், தாலி பாக்கியம் பறிபோகும் பதவி பறிப்பு ஆகியவை நடந்து ரெம்பவே படாய்படுத்தியெடுத்திருக்கும். கடந்த 4வருடங்களில் இவர் சந்தித்த அவமானங்கள் துன்பங்கள் ஏராளம். பட்ட துன்பங்கள் அவமானங்கள் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறி மிகப்பெரிய அளவிற்கு அரசியல் அதிகாரம் மனதில் சந்தோசம் அவமானப்படுத்தியவர்கள் மண்டியிடுவது ஏன் இவர் கைகாட்டும் ஆள்தான் முதல்வராகும் அளவிற்கு சக்தி படைத்தவராக வலம் வருவார். அதற்கொல்லம் காரணம் அக்டோபர் 27 குருபெயர்ச்சி வருகிறது. இவரது ஜாதக கட்டத்தில் குரு 11ம் இடத்தில் அமருகிறார். இது லாபஸ்தானம் ஆகும். இது சோதிட சாஸ்திரத்தில் அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை குருபகவான் கொடுப்பார். குரு பார்க்க கோடி நன்மை. ஆகையால் அரசியலில் இருந்த வந்த எதிரிகள் எல்லாம் ஓடி ஓழிவார்கள்.  மனதில் சந்தோஷம். கட்டளையிடுதல். அழகு. உடலில் தெம்பு. விவசாய நிலங்கள் செழிப்படையும், அரசியலில் மிகப்பெரிய பதவிகள் தேடி வரும் என்பது நிதர்சனமான உண்மை. 

  வரக்கூடிய ராகு கேது பெயர்ச்சி கிரகங்களும் இவருக்கு சாதகமாகவே அமைகிறது.  இப்படி 4 கிரங்கள் சசிகலாவுக்கு சாதகமான சூழ்நிலைக்கே வருகிறது.  மொத்தத்தில் வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் சசிகலாவுக்கு ஒரு வசந்தகாலம் என்றே சொல்லலாம்.  வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா  கை காட்டும் ஆட்களே ஆட்சி அதிகாரத்தில் அமர அதிக வாய்ப்பு உள்ளது என்று அடித்துச் சொல்லுகிறார்.அந்த அளவிற்கு சசிகலா கை ஓங்கி இருக்கும். மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவியாக தமிழகத்தில உலா வருவார்.இவரது வருகை அதிமுகவிற்கு சரிவை தரும் என்கிறார்.
                     

click me!