ஒத்த ஓட்டு வாங்கியவர் பாஜககாரர்தான்... ஆனால் அவர் தாமரை சின்னத்தில் போட்டியிடவில்லை.. அண்ணாமலை பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 10:43 AM IST
Highlights

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அராஜகம் தலை தூக்க தொடங்கியுள்ளது, திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி மற்றும் திருநெல்வேலி எம்பிக்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும், நாளுக்கு நாள் அராஜகம் தலைதூக்க தொடங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். நேற்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இவ்வாறு கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது, ஆனாலும் தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக பாஜக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என் ரவியை நேற்று மாலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்காட்சி பிரதிநிதிகள் நேரில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, 

இதையும் படியுங்கள்: சீன ராணுவத்துடன் மோதி உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மனைவிக்கு வீட்டு மனை.. அண்ணாமலை தலைமையில் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அராஜகம் தலை தூக்க தொடங்கியுள்ளது, திமுகவைச் சேர்ந்த கடலூர் எம்.பி மற்றும் திருநெல்வேலி எம்பிக்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஒரு பெண்ணின் தலையை வெட்டி அந்த தலையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று வைக்கும் அளவிற்கு ஆணவக் கொலை நடந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளுநரை சந்தித்து புகார் அளித்துள்ளோம், முதல்வருக்கு இணையான அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது என்பதால் அவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் கடலூர் எம்பிக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள கொலை வழக்கு குறித்து முதல்வர் பேசியிருக்க வேண்டும், ஆனால் அவர் பேசவில்லை என்பதால் ஆளுநரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

இதையும் படியுங்கள்: நான் ஒன்றும் அரசியலுக்கு சும்மா வந்துவிடவில்லை.. வெளிநாட்டில் பல உயரங்களை எட்டியவன் நான். பிடிஆர் பெருமிதம்.

அதேபோல் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த வேட்பாளர்  ஒரே ஒரு வாக்கு வாங்கு பெற்றிருப்பது குறித்து விளக்கமளித்த அவர், அந்த நபர் பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார், ஆனால் அவர் இந்த வார்டு உறுப்பினர் பதவிக்காக தனித்து கார் சின்னத்தில் போட்டியிட்டு இருக்கிறார், அதனால் அவருக்கு ஒரு வாக்கி கிடைத்திருக்கிறது. ஆனால் ஊடகங்கள் அவரை பாஜகவின் தாமரை சின்னத்தில் நின்று ஒரு வாக்கு வாங்கியது போல விமர்சித்து வருகின்றன, உண்மையில் அந்த நபர் தொடர்ந்து மக்களுக்காக நேர்மையாக உழைக்கும் பட்சத்தில் அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றார். வேறொரு சின்னத்தில் நின்ற அவரை ஊடகங்கள் அவர் பாஜக வேட்பாளர் என பொய்யாக கூறுகிறது என அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

2024 ல் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும் என  பேசியது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வெளியேறவேண்டும் என எச்சரிக்கை விடுகிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆம் அப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம் என அண்ணாமலை தெரிவித்தார். ஊராட்சி தேர்தலில் பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக வரும் புகார் குறித்து எழுப்பிய கேள்விக்கு அது வழக்கமாக திமுக ஆட்சியில் நடைபெறும் ஒன்றுதான் எனவும் அது குறித்து நாளை தெரியவரும் எனவும் அண்ணாமலை கூறினார்.

 

click me!