அந்த கட்சிக்கு கொள்கையும் இல்ல, தலைவரும் இல்ல.. எம்ஜிஆருக்கு துண்டு போட்ட காங்கிரஸை கழுவி ஊற்றிய அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2020, 3:40 PM IST
Highlights

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2008ஆம் ஆண்டு சுங்க சாவடி அமைத்த திமுக, தற்போது அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, சோழிங்கநல்லூர் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக எந்தவித தீர்வையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களுக்கு எதிரான திட்டங்களை ஆட்சியில் இருக்கும் பொழுது கொண்டு வந்து விட்டு, தற்போது ஆட்சியில் இல்லாத சமயத்தில் அதே திட்டங்களை திமுக எதிர்ப்பது என்பது தேர்தல் நேரத்தில் திமுக செய்யும் அரசியல் நாடகம் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னை சோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்ததாகவும் அதற்கு பின்னால் 2006 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக அங்கு சுங்கச் சாவடி அமைத்து பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டினார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2008ஆம் ஆண்டு சுங்க சாவடி அமைத்த திமுக, தற்போது அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, சோழிங்கநல்லூர் போக்குவரத்து நெரிசலுக்கு அதிமுக எந்தவித தீர்வையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி போராட்டம் நடத்திவருகின்றனர். 

தொடர்ந்து பேசிய அமைச்சர், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில், கூவம் நதியில் போடப்பட்டு இருக்கிற தூண்கள் முறையாக சரி செய்த பின்னர் அதன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், OMR சாலையில் போடப்பட்ட பறக்கும் வழி சாலையில் தற்போது மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அந்த பணிகள் முதற்கட்டமாக நிறைவடைந்த பின்னர், எங்கெல்லாம் மெட்ரோ ரயிலின் தூண்கள் வரவில்லையோ அங்கெல்லாம் ஓஎம்ஆர் பறக்கும் சாலைத் திட்டத்தின் தூண்கள் அமைக்கப்பட்டு அந்த திட்டமும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார். மேலும் சிவகங்கை உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றியைபோல், அதிமுக அடுத்தடுத்த உள்ளாட்சி தேர்தல்களிலும் நேர்மையான வெற்றி பெறும் என்றும் அதற்கு தற்போது நடைபெற்று முடிந்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே சான்று என்றும் கூறினார். 

பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர், எம்ஜிஆர் சிலைக்கு துண்டு அணிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தலைவருக்கு துண்டு அணிவிப்பது என்பது அந்த கட்சியில் நிலையான தலைவரும், கொள்கையும் இல்லை என்பதையே காட்டுவதாக உள்ளது என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.  அரசின் திட்டங்களுக்கு எல்லாம் அதிமுகவின் கொடிகளை நட்டு வீண் விளம்பரம் தேடுகிறார்கள் என்ற திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்காலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதியில் கட்டப்பட்ட கட்டிடங்களை கூட திமுகவினர் சென்று திறந்துவைத்த விவகாரம் எல்லாம் நாடே அறியும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

 

click me!