ஒபிஎஸ் கிணறு விற்பணை - இலவசத்துக்கு பளார்...!!!

 
Published : Jul 23, 2017, 08:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
ஒபிஎஸ் கிணறு விற்பணை - இலவசத்துக்கு பளார்...!!!

சுருக்கம்

The oPS announced that the well and the land was sold to the villagers in Lakshmipuram.

லட்சுமிபுரத்தில் கிராம மக்களுக்கு இலவசமாக கொடுப்பதாக ஒபிஎஸ் அறிவித்த கிணறு மற்றும் நிலம் தற்போது தனி நபருக்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரத்தில்  ராட்சத கிணறு ஒன்று உள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மிகுந்த குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டது.

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள ராட்சத கிணறு தான் எனவும், அது முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு சொந்தமானது எனவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் தோட்டத்தை நோக்கி படையெடுத்து கிணற்றை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து மதுரை வந்த ஒபிஎஸ் லட்சுமிபுரத்தில் உள்ள கிணற்றை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்க தயார் என தெரிவித்தார்.

இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சந்தோசமடைந்தனர். இந்நிலையில் தான் இலவசமாக தருகிறேன் என ஒபிஎஸ் கூரிய கிணறு மற்றும் நிலம் தனி நபரான சுப்புராஜ் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளதும், கடந்த 12 ஆம் தேதி தான் இது விற்பனையாகியுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!