காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி... ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு கிலி கொடுக்கும் சசிகலா..!

Published : Oct 19, 2021, 12:34 PM IST
காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி... ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு கிலி கொடுக்கும் சசிகலா..!

சுருக்கம்

காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி என சசிகலா தெரிவித்துள்ளார்.

காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில், ‘அம்மா வழிநின்று கழகம் காப்போம் கரம் கோர்ப்போம், பகை வெல்வோம்’ என்ற தலைப்பில் வி.கே. சசிகலா எழுதியுள்ள மடலில், ‘புறப்படுங்கள்... புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா? கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. 

நிறை அன்புடைய சகோதர.. சகோதரிகளே! கழகத்தின் பேரன்புத் தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும், இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நாம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்... புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளைப் பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம். கரம் கோர்ப்போம், பகை வெல்வோம். ஒற்றுமை பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழச் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம்.

புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?, மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அஇஅதிமுக நாடாண்டதையும், அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்துவிட்டோமே... சிந்தியுங்கள். காலத்திற்காய் காத்திருப்பவன் ஏமாளி, காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்ததுதானே. வெல்வோம் சகோதரர்களே, நானிருக்கிறேன் என்பதைவிட நாமிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!