அடுத்த அதிரடி... வெளிநாட்டு இந்தியர்கள் ஆன்லைன் மூலம் ஓட்டுப் போட தேர்தல் ஆணையம் பரிந்துரை..!

By Asianet TamilFirst Published Dec 23, 2020, 9:40 PM IST
Highlights

வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க மத்திய சட்டத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
 

அடுத்த ஆண்டு மே மாதத்தில் தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனாவைக் காரணம் இந்தத் தேர்தலில் 80 வயதுக்குட்பட்ட சீனியர் சிட்டிசன்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் ஓட்டு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐந்து மாநில தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்திய தேர்தலில் சட்டத்துறைக்குப் பரிந்துரை வழங்கியுள்ளது.


இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் ஆணையத்திடம் பல பரிந்துரைகள் செய்யப்பட்டன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நேரடியாக அல்லாமல் நாமினி மூலம் வாக்களிப்பது, அந்தந்த நாட்டு தூதரகங்களில் வாக்குச்சாவடிகள் வைத்து வாக்களிப்பது, தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் லிங்க் மூலம் வாக்களிப்பது என பல பரிந்துரைகள் தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைக்கப்பட்டன.


இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பான பரிந்துரை கடந்த மாதமே அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான தகவல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
 

click me!