
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த வருடம் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அவரின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசியல் திருப்பங்கள் மட்டுமல்லாது பல்வேறு குழப்பங்களும் நிலவி வருகின்றன.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த சென்னை, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு, ஏற்கனவே தேர்தல் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் பணப்பட்டுவாடா காரணமாக திடீர் என்று தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரண்டு அணிகளாக பிளவு பட்டிருந்த அதிமுக அணிகள் பன்னீர்-எடப்பாடி அணிகள் இணைந்தன. இதனால் டிடிவி தினகரன் தனித்து விடப்பட்டார்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு துவங்கிய விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில வருடங்களாக, இந்தியாவையே உலுக்கி வந்த 2ஜி அலைக்கற்றை வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்ட்டது. இந்த நிலையில், குற்றம்
சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால், ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆர்.கே.நகரில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆர.கே.நகர் தொகுதி குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த கருத்து கணிப்புகளில் தினகரனுக்கு ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு
வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அதிமுகவுக்கு சாதகமாக கருத்து கணிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பால், திமுக உற்சாகமடைந்துள்ளது. தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி, அநீதி வீழும், அறம் வெல்லும் என்று கூறியுள்ளார். கருணாநிதி கையெழுத்திட்ட அந்த வசனம், வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தி.மு.க-வுக்கு இனி எல்லாமே வெற்றிதான் என்று துரைமுருகனும், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எங்களை அவமானப்படுத்தி அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் 2ஜி வழக்கு. இந்த வழக்கில் பெரிய அளவில் சித்திரித்து, பொய் கணக்கைக் காட்டி திரித்தார்கள். தற்போது தி.மு.க மீதான களங்கம் நீங்கிவிட்டது என்று கூறியிருந்தார்.
தற்போது ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே, 2ஜி வழக்கில் திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால், அது ஆர்.கே.நகரில் எதிரொலிக்கும் என்று கூறப்பட்டது. அதாவது, தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாகவோ, அல்லது பாதகமாகவோ வெளியானால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 2ஜி வழக்கில் தீர்ப்பு திமுகவுக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும்...? தமிழகத்தில் அடுத்து அரசியல் மாற்றங்கள் என்னென்ன நிகழும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...! அரசியல் வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாள் என்றே கூறப்படுகிறது. தமிழகம் அடுத்தடுத்து இன்னும் பல்வேறு பரபரப்புகளை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...!
திமுகவின் அடுத்த நகர்வு வெற்றிப்பாதையை நோக்கித்தான் என்று திமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில், திமுகவின் அடுத்த செயல்பாடு என்னவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்...!