அந்த தண்ணி எந்தண்ணி இல்ல.. பிரதமர் மோடி செய்தியை மறுத்த தி நியூயார்க் டைம்ஸ்…

By manimegalai aFirst Published Sep 29, 2021, 8:24 PM IST
Highlights

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை பற்றி முதல் பக்கத்தில் எந்த செய்தியும் பிரசுரிக்கவில்லை என்று பிரபல இதழான தி நியூயார்க் டைம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை பற்றி முதல் பக்கத்தில் எந்த செய்தியும் பிரசுரிக்கவில்லை என்று பிரபல இதழான தி நியூயார்க் டைம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, குவாட் மாநாட்டில் கலந்து கொண்டார். வழக்கம் போல உலக நாடுகளிடையே அவரது பயணம் பெரும் ஆர்வமுடன் கவனிக்கப்பட்டது.

உலகின் கடைசி நம்பிக்கை என்ற தலைப்பிட்டு பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் பற்றிய ஒரு செய்தி பிரபல இதழான தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியயிட்டதாக ஒரு போட்டோ இணையத்தில் பரவியது.

சகட்டுமேனிக்கு சமூக வலைதளங்களில் இந்த போட்டோ செய்தி பரவ, பாஜகவினர் துள்ளி குதிக்காத குறை. ஆளாளுக்கு இஷ்டம் போல அந்த செய்தியை பாராட்டி, சிலாகித்து கமெண்டுகளை போட்டு தாக்கிவிட்டனர்.

அதே நேரத்தில் இது உண்மையா? இல்லையா? என்று பலரும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்து பொய் செய்தி என்றும் கட்டம் கட்டி அறிவு பெருமை பேசினர். செப்டம்பர் 26ம் தேதி அன்று வெளியான செய்தி இஷ்டம் போல இந்த செய்தி ரவுண்டிக்க பலரும் ஒருவேளை உண்மைதானோ என்று எண்ண ஆரம்பித்தனர்.

இப்போது எது உண்மை என்பதை போட்டுடைத்து இருக்கிறது தி நியூயார்க் டைம்ஸ். இது முழுக்க, முழுக்க பொய் செய்தி என்றும், போலியாக வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர் என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறது. தங்கள் இதழில் இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஒரு சர்வதேச, பிரபலமான இதழில் இந்திய பிரதமர் பற்றி வெளியிடப்பட்ட செய்தி பொய்யானது என்று மறுப்பு தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும். இப்போது இந்த தகவலை எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் வைரலாக்கிவிட பாஜக மத்தியில் ஏனோ சோகத்தையும், வருத்தத்தையும் காண முடிகிறது என்கின்றனர் இணையவாசிகள்…!

click me!