அம்மாவை தான் பாலோ செய்கிறார் ஸ்டாலின்…! செல்லூர் ராஜூ ‘செம’

Published : Sep 29, 2021, 08:01 PM IST
அம்மாவை தான் பாலோ செய்கிறார் ஸ்டாலின்…! செல்லூர் ராஜூ ‘செம’

சுருக்கம்

ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா எவ்வாறு ரவுடிகளை ஒடுக்கினாரோ, அதுபோல ஸ்டாலின் ஒடுக்க முயற்சிக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி இருக்கிறார்.

மதுரை: ஆட்சியில் இருந்த போது ஜெயலலிதா எவ்வாறு ரவுடிகளை ஒடுக்கினாரோ, அதுபோல ஸ்டாலின் ஒடுக்க முயற்சிக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி இருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரை மாநகராட்சி ஆணையரை சந்தித்தார். அப்போது மதுரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.

அதன் பின்னர் மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கியமான தெருக்கள், சாலைகள் அனைத்தும் மோசமாக மேடு, பள்ளமாக இருக்கிறது.

அனைத்து குறைகளையும் சரிசெய்ய வேண்டும். பாதாள சாக்கடை நீர் குடிதண்ணீரில் கலக்கிறது. அதை சரி செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்துவிட்டனர்.

ஜெயலலிதா ஆட்சியில் ரவுடுகள் ஒடுக்கப்பட்டனர், கடுமையான நடவடிக்கைகளை அவர் எடுத்தார். அதுபோல தான் இப்போது முதலமைச்சர் ஸ்டாலின் ரவுடிகளை ஒடுக்க முயற்சிக்கிறார். அது வரவேற்கத்தக்க ஒன்று என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!