
திராவிட கட்சிகளுக்கு மாறாக மக்கள் புதிய தேடலை ஆரம்பித்துள்ளதாகவும், தமிழக மக்களின் புதிய தேடலை பா.ஜ.கவினால் தான் பூர்த்தி செய்ய முடியும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் சுக்மா பகுதியில் முகாமிட்டிருந்த ராணுவ வீர்கள் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 25 வீரர்கள் உயிரிழந்தனர். அதில் 4 பேர் தமிழக வீரர்கள்.
அவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி மதுரையை சேர்ந்த அழகுபாண்டியின் உடல் மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
திராவிட கட்சிகளுக்கு மாறாக மக்கள் புதிய தேடலை ஆரம்பித்துள்ளனர்.
தமிழக மக்களின் புதிய தேடலை பா.ஜ.கவினால் தான் பூர்த்தி செய்ய முடியும்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.
மீண்டும் திராவிட கட்சிகள் வென்றால் கொள்ளையடிக்க அனுமதி அளித்தது போல் ஆகிவிடும்.
கூடா நட்பு கேடாய் முடியும் என்பது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு தான் பொருந்தும்.