அதி நவீன ரபேல் போர் விமானம் இந்தியா வருகை.! வரவேற்புக்கு தயாரான அம்பாலா மக்கள்.!!

By T BalamurukanFirst Published Jul 29, 2020, 9:59 AM IST
Highlights

ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து,அதி நவீன ரகம் கொண்ட 36 ரபேல் விமானங்களை  கொள்முதல் செய்ய 4ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போட்டது இந்திய அரசு. ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில் தான்  ஐந்து ரபேல் போர் விமானங்கள் இன்று 7 ஆயிரம் கிலோமீட்டர் கடந்து இந்தியா வருகின்றது.
 
ரபேல் விமானம் வருவதையொட்டி ஹரியானாவில் அமைந்துள்ள "அம்பாலா" விமானப்படை தளம் அருகே, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முழுதும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் போட்டது.இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம் புறப்பட்டன. இந்த விமானங்கள், 7,000 கி.மீ., பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள, "அம்பாலா" விமானப்படை தளத்துக்கு, இன்று இரவு வந்தடைகின்றன. இதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், 'ட்ரோன்' மூலம் புகைப்படங்கள் மற்றும் 'வீடியோ' எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது."அம்பாலா" மக்கள் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரபேல் விமானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

click me!