அதிமுக ஆட்சியாளர்கள் செய்த தவறு.. 3.34 லட்சம் பேர் பரிதவிக்கிறாங்க.. போட்டுதாக்கிய சமூக நலத்துறை அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 3, 2021, 6:27 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தாலிக்கு தங்கம் திட்ட உதவி கோரி காத்திருப்போர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரமாக உயிர்ந்துள்ளது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்யாததால் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தாலிக்கு தங்கம் திட்ட உதவி கோரி காத்திருப்போர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரமாக உயிர்ந்துள்ளது என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, தாய்பாலின் முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பிரச்சார வாகன பயணத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அங்கன்வாடி ஊழியர்கள் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும். கொரோனே காலகட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் பணிகள் பாதிக்கபடாமல் இருக்க  சம்மந்தப்பட்ட அங்கன்வாடி மையங்கள் வாயிலாக வீடுகளுக்கே சென்று  சத்து மாவு , முட்டை , உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். 

தாலிக்கு தங்கம் திட்டத்தில் கடந்த ஆட்சியில் போதிய நிதி ஒதுக்காததால் 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு திட்டத்திற்கான உதவி கோரி நிலுவையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 3.34 லட்சமாக பதிவாகி இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நலத்திட்டம் வழங்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கொரோனே காரணமாக 126 குழந்தைகள் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர் ,1558 குழந்தைகளின்  பெற்றோர்களில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுக்கு அரசின் நிதிஉதவி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

click me!