அதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்..? அமைச்சர் அதிரடி. ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..

Published : Aug 03, 2021, 05:50 PM ISTUpdated : Aug 03, 2021, 05:51 PM IST
அதிமுக கொண்டுவந்த திட்டத்தை விரிவுபடுத்தபோறோம்..? அமைச்சர் அதிரடி.  ஸ்கெச் போட்டு தூக்கும் திமுக..

சுருக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஒரு சிலர் மொத்தமாக உள்ளாட்சி பணிகளை டெண்டர் எடுத்து அதை காலதாமதமாக மேற்கொண்டு வருவதாகவும், விரைந்து முடிக்க அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், கால தாமதமானால் டெண்டர் ரத்து செய்யப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.  

மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நிதி நிலைமையை பொருத்து விரிவுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தார். அப்போது பேசிய அவர். நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு ரூ.300 கொடுப்பதற்கான திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். 

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார் அவர். மாநகராட்சிகளுக்கு அருகே உள்ள சில ஊராட்சிகள், மாநகராட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும், அதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், ஒரு சிலர் மொத்தமாக உள்ளாட்சி பணிகளை டெண்டர் எடுத்து அதை காலதாமதமாக மேற்கொண்டு வருவதாகவும், விரைந்து முடிக்க அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும், கால தாமதமானால் டெண்டர் ரத்து செய்யப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

அதிக அளவில் ஜல் ஜீவன் திட்டத்தில் பணிகள் தரமாக இல்லை என புகார்கள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீது காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். மகளிருக்கான இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், நிதி நிலைமையை வைத்து விரிவுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். 
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!