மோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை... 3 நாட்களில் மூன்று விபத்துகள்..!

Published : Oct 07, 2020, 06:07 PM IST
மோடி திறந்து வைத்த உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை... 3 நாட்களில் மூன்று விபத்துகள்..!

சுருக்கம்

வேகமாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகனங்களை இயக்கி கொண்டே செல்பிகளை எடுப்பது போன்றவை இந்த விபத்துகளுக்கு காரணமாக இருந்துள்ளது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களுக்கு முன்னர் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பெருமையுடன் திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆனால் அந்த சுரங்கப்பாதையில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. 

முன்னால் பிரதமர் வாஜ்பாய் பெயரில் இந்த சுரங்கப்பாதை திறந்த மூன்றே நாட்களில் 3 விபத்துக்கள் நடந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான விபத்துகள் சுற்றுலா பயணிகளால் நடந்துள்ளது என்றும் வேகமாக வாகனங்களை இயக்குவது மற்றும் வாகனங்களை இயக்கி கொண்டே செல்பிகளை எடுப்பது போன்றவை இந்த விபத்துகளுக்கு காரணமாக இருந்துள்ளது.

இந்த விபத்துகள் குறித்த விவரங்களை சுரங்கப்பாதைகள் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் அறிந்த காவல்துறையினர் சுரங்கப் பாதையில் செல்லும்போது செல்பி எடுப்பது தவிர்க்க வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்
திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!