போனியாகாத கட்சிக்கு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தால் என்ன? திருநாவுக்கரசர் மரண கலாய்..!

By vinoth kumarFirst Published Oct 7, 2020, 6:02 PM IST
Highlights

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதா இருந்திருந்தால் கூட அவரால் மீண்டும் முதல்வராக வர முடியாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதா இருந்திருந்தால் கூட அவரால் மீண்டும் முதல்வராக வர முடியாது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையை காரசாரமான விவாதம் நடைபெற்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பெரும் போராட்டங்களுக்கு இடையே அதிமுகவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.யும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர், தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதா இருந்திருந்தால் கூட அவரால் மீண்டும் முதல்வராக வர முடியாது. எடப்பாடி பழனிசாமியிடம் தான் ஓ.பன்னீர்செல்வத்தை விட வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கான காரணம் இருக்கும் எனக் கூறினார்.

அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதால் மக்களுக்கு ஆட்சி மீது இயல்பாகவே வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தன்னால் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால் என்ன எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால் என்ன அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அதிமுகவில் இப்போது ஏற்பட்ட குழப்பமே தேவையற்ற குழப்பம் என்றார். மேலும்,  இந்த விவகாரத்தில் பாஜகவின் ரோல் நிச்சயம் இருக்கும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 

click me!