கடைசிவரை கொள்கையை விட்டுக் கொடுக்காத தா.பா.. மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்த ரியல் கம்யூனிஸ்ட்.

Published : Feb 26, 2021, 11:28 AM IST
கடைசிவரை கொள்கையை விட்டுக் கொடுக்காத தா.பா.. மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்த ரியல் கம்யூனிஸ்ட்.

சுருக்கம்

 எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக நின்று போராடும் தீரர் பாண்டியன் என அரசியல் கட்சியினர் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருக்கு வயது 88.

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா பாண்டியன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சிப் பணிகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

நோய்த்தொற்று மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு, சிறப்பு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்,  தா. பாண்டியனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தா.பாண்டியன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  நேற்று இரவே அவர் காலமானதாக செய்திகள் வெளியானது. 

ஆனால்   அந்த தகவல் உறுதி  செய்யப்படவில்லை, இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மட்டுமன்று அனைத்து அரசியல் கட்சி மற்றும் கூட்டணிக்  கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தனது கொள்கையில் உறுதியாக நின்று போராடும் தீரர் பாண்டியன் என அரசியல் கட்சிகள் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றன. அதே போல் தனக்கு எப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், மக்களேடு மக்களாக அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறும் எளிமைமிகு காம்ரேட்டாக இருந்து மறைந்தார் தா.பா என்பது குறிப்பிடதக்கது.  
 

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!