ஜெ. வை என்ன செய்தீங்க சசிகலா..?  சிறையிலேயே விசாரிக்க திட்டமாம்...! அதிரடி கிளப்பும் விசாரணை ஆணையம்...!

 
Published : Jan 25, 2018, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஜெ. வை என்ன செய்தீங்க சசிகலா..?  சிறையிலேயே விசாரிக்க திட்டமாம்...! அதிரடி கிளப்பும் விசாரணை ஆணையம்...!

சுருக்கம்

The inquiry commission decided to investigate Sasikala in jail

ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை பெங்களூர் சிறையிலேயே விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்தனர். 75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதையடுத்து ஜெ., மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன் அமைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி விசாரணை கமிஷன் விசாரணை செய்து வருகின்றது. 

இதில், சசி குடும்பத்தாரிடமும், ஜெ குடும்பத்தாரிடமும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஜெயலலிதாவுடன் நெருங்கி பழகியவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றார். 

அதன்படி ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகிறது விசாரணை ஆணையம்.

அந்த வகையில் இன்று 2 வது முறையாக மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சசிகலாவையும் ஆஜராக விசாரணை ஆணையம் வலியுறுத்தியது. ஆனால் அவர் சிறையில் மவுன விரதம் இருப்பதால் அவருக்கு பதிலாக அவரது வக்கீல் செந்தூர் பாண்டியன் ஆஜராகி எழுத்துபூர்வ அறிக்கையை தாக்கல் செய்தார். 

இந்நிலையில்,  ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவை பெங்களூர் சிறையிலேயே விசாரிக்க ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!