27 வயசுதான்...! வசமாக சிக்கினார் விவேக்..! அழைத்து சென்றது ஐ.டி..

Asianet News Tamil  
Published : Nov 13, 2017, 05:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
27 வயசுதான்...! வசமாக சிக்கினார் விவேக்..! அழைத்து சென்றது ஐ.டி..

சுருக்கம்

The income tax authorities have taken Vivek to inquire about how Vivek 27 had a lot of assets.

27 வயதான விவேக்கிடம் ஏராளமான சொத்துக்கள் வந்தது எப்படி என விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்கை அழைத்து சென்றுள்ளனர். 

கடந்த 5 நாட்களாக சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் நடைபெற்ற சோதனையை தொடர்ந்து வருமான வரித்துறை தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர். 

சசிகலா குடும்பத்தினர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் 5-வது நாளாக  வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 5 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். 

மேலும் ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர், ஜாஸ் சினிமா  ஆகிய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். 

ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர், ஜாஸ் சினிமா  ஆகியவை சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் மகன் விவேக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. 

இதில் ஜாஸ் சினிமாஸ் மட்டும் ரூ. 1000 கோடிக்கு மேல் மதிப்புடையது. இதையடுத்து விவேக்கிடம் வருமான வரித்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை மெற்கொண்டனர். 

இதைதொடர்ந்து 27 வயதான விவேக்கிடம் ஏராளமான சொத்துக்கள் வந்தது எப்படி என விசாரிக்க வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக்கை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

காங்கிரசில் 7 கோடிக்கு சீட் விற்பனை? ராகுல், பிரியங்கா மீது பாஜக பகீர் குற்றச்சாட்டு!
கழுத்தில் துண்டு போட்டு காசு வாங்கிய திமுக எம்.எல்.ஏ..! ED -யிடம் சிக்கிய வாட்ஸ்-அப் ஆதாரம்..!