புதுச்சேரியில் பெண்களுக்கு மாதாந்திர உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு துனை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான உரிமை தொகை
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக பெண்களுக்கு உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக இந்த திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தை போல் புதுவையிலும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என புதுவை மக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை எந்தளவுக்கு அடிமையாக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.. அன்புமணி கவலை.!
புதுவை ஆளுநர் ஒப்புதல்
இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த புதுவை மாநில அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 வழங்கும் திட்டத்திற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
ஆளுநர் சரியாக தான் நடந்து கொண்டார்.. எல்லாமே பொய்.! உண்மையை உடைக்கும் அண்ணாமலை