ஒரு கொரோனா தடுப்பூசியை 219 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்கிறது அரசு.. தனியார் விலை 1000 ரூபாய்.

By Ezhilarasan BabuFirst Published Jan 5, 2021, 11:52 AM IST
Highlights

இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, எங்களின் கொரோனா தடுப்பூசியை (கோவிஷீல்ட்) சந்தைப்படுத்த மத்திய அரசு அனுமதித்தால் ஒரு டோஸ் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்,

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியை அவசரகால  பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில்,  ஒரு டோஸ் மருந்தை இந்திய அரசு 219  ரூபாய்க்கு வாங்குவதாகவும், அம் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாடு முழுதும் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. ஆனாலும் பிரிட்டனில் உருவாகியுள்ள புதிய வகை வைரஸ், ஐரோப்பிய  நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தென்படத் தொடங்கியுள்ளது. அதேபோல் வைரஸின் இரண்டாவது அலை, மூன்றாவது  அலை உருவாக வாய்ப்பு இருப்பதால் கொரோனா தடுப்பூசி தவிர்க்க முடியாததாகி உள்ளது. முன்கூட்டியே வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், ஒவ்வொரு மருந்தாக ஒன்றன்பின் ஒன்றாக வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. 

இதில் கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவின் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, எங்களின் கொரோனா தடுப்பூசியை (கோவிஷீல்ட்) சந்தைப்படுத்த மத்திய அரசு அனுமதித்தால் ஒரு டோஸ் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், ஆனால் நாங்கள் அரசாங்கத்திற்கு மிகவும்  குறைந்த விலையில் வழங்குகிறோம். முதல் 100 மில்லியன் டோஸில் ஒரு டோஸின் விலை 200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதன் பின்னர் இது வெவ்வேறு விலையில் வழங்கப்படும், ஆனால் நாங்கள் அரசாங்கத்திற்கு எதைக் கொடுத்தாலும் அவர்கள் இந்திய மக்களுக்கு இலவசமாக வழங்கப் போகிறார்கள். ஆனால் நாங்கள் அதை தனியார் சந்தையில் விற்கும் போது ஒரு டோஸ் விலை 1000 ரூபாயாக இருக்கும். 

ஒவ்வொரு நபருக்கும் 2 டோஸ் போட வேண்டும், எனவே ஒரு நபருக்கு 2000 ரூபாய் செலவாகும், அடுத்த 7 முதல் 10 நாட்களில் அனைத்து  ஆவண பணிகளும் நிறைவடையும். அடுத்த மாதத்தில் 70 முதல் 80 மில்லியன் டோஸ்வரை உற்பத்தி செய்து வழங்கப்படும். மார்ச் மாதத்திற்குள் தடுப்பூசி உற்பத்தியை சீரம் நிறுவனம் இரட்டிப்பாக்கும். ஆனால் அதை தனியார் சந்தையில் அனுமதிப்பது குறித்து அரசாங்கம்தான் முடிவு செய்யும். மொத்தத்தில் 3 முதல் 4 அமெரிக்க டாலர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசியை வாங்குகிறது  இதன்படி இந்தியாவில் 219 முதல் 292 ரூபாய் என்ற விலையில் அரசு கொள்முதல் செய்கிறது. இவ்வாறி அவர் கூறினார்.  
 

click me!