தலையில் பூ தூவியதால் பதறிப்போன மு.க.ஸ்டாலின்... கெட்டவார்த்தையில் திட்டிய திமுக எம்.எல்.ஏ..!

Published : Jan 05, 2021, 11:17 AM IST
தலையில் பூ தூவியதால் பதறிப்போன மு.க.ஸ்டாலின்... கெட்டவார்த்தையில் திட்டிய திமுக எம்.எல்.ஏ..!

சுருக்கம்

மு.க.ஸ்டாலின் தலையில் பூ தூவிய தொண்டனை திமுக எம்.எல்.ஏ ஒருவர் பொதுவெளியில் கெட்ட வார்த்தையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மு.க.ஸ்டாலின் தலையில் பூ தூவிய தொண்டனை திமுக எம்.எல்.ஏ ஒருவர் பொதுவெளியில் கெட்ட வார்த்தையில் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி தேவராயபுரத்தில் கடந்த 2ஆம் தேதி திமுக சார்பில் நடத்தப்பட்ட  மக்கள் கிராம சபையில் மு.க ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் பூங்கொடி என்ற பெண் ஸ்டாலினை நோக்கி அதிரடியான  கேள்விகளை கேட்டார். அதற்கு, ‘மேடம்... உங்களுக்கு நான் பதிலளிக்க மாட்டேன். நீங்கள் வேலுமணி அனுப்பி இங்கே வந்திருக்கிறீர்கள். வெளியே போங்க’ என்று உரக்கக் கூறினார். பின்னர் அந்த பெண்  காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டார்.

 

இந்தப்பேச்சு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் கும்பகோணத்தில் நடந்துள்ளது. கும்பகோணத்தில் மு.க.ஸ்டாலின் காரைவிட்டு இறங்கி நடந்துவரும் போது பூ  தூவிய தொண்டன், ஒருவரை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கெட்ட வார்த்தையில் திட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதந்த வீடியோவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள் மலர் தூவினால் மயிர்கொட்டி விடுமா தளபதி? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலினை கதறவிடும் கூட்டணி கட்சிகள்.. மைனாரிட்டி ஆட்சி..? திமுகவுக்கு இரண்டே ஆப்ஷன்..!
மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்.. பிரதமரை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. இபிஎஸ் மீதும் சரமாரி அட்டாக்!