தத்தளிக்கும் தலைநகர்... ஒருவாரம் முழு ஊரடங்கை அறிவித்தது அரசு..!

Published : Apr 19, 2021, 12:33 PM IST
தத்தளிக்கும் தலைநகர்... ஒருவாரம் முழு ஊரடங்கை அறிவித்தது அரசு..!

சுருக்கம்

இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களையும் கொரோனா இரண்டாம் அலை சூறையாடி வருகிறது.

டெல்லியில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அறிவிப்பு அறிவித்துள்ளது டெல்லி மாநில அரசு. டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று நள்ளிரவு (20-04-2021) முதல் 26-04-2021 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. 

இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களையும் கொரோனா இரண்டாம் அலை சூறையாடி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தலைநகர் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல், மருத்துவக் கட்டமைப்பை ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி, தடுப்பூசி போதாமே என பல்வேறு வகை தாக்குதல்களுக்கு அம்மாநில அரசுகள் ஆளாகியிருக்கின்றன.

இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அஸ்திரத்தைக் கையிலெடுத்திருக்கின்றன. ஆரம்பத்தில் இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மகாராஷ்டிராவில் நிலைமை மிக மோசமாகப் போனதால் இந்தியாவின் முதல் மாநிலமாக மீண்டும் அனைத்து நாட்களிலும் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது.

இம்மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது டெல்லியிலும் நாளை முதல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வரை ஒரு வார காலம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. முதலமைச்சர் கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!