
2ஜி வழக்கில் செண்டம் எடுத்து பாஸாகியிருக்கிறது தி.மு.க. ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் என்னவாகப்போகிறது? என்பது புதிராக இருக்கிறது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வாறு கவனமாக செயல்பட வேண்டும்! என்பது குறித்து தலைமை நிர்வாகிகளுடன் சாதாரண ஆலோசனையில் இறங்கினாராம் ஸ்டாலின். அப்போது ஒரு நிர்வாகி ‘ ஸ்பெக்ட்ரம் வழக்குல நமக்கு சாதகமான தீர்ப்பு வந்தது பெரிய மைலேஜ்தான் தளபதி. இந்த தீர்ப்பை ஓட்டுப்போட காத்திருக்கிற ஆர்.கே.நகர் மக்கள்ட்ட எப்படிடா கொண்டு போயி சேர்க்கப்போறோமுன்னு நாம கவலைப்பட்டப்ப அந்த வேலையை ரொம்ப ஈஸியா மீடியாக்காரங்க முடிச்சு கொடுத்துட்டாங்க.
பரபரப்பை காட்டி மக்களை தீர்ப்பை நோக்கி திரும்பிப் பார்க்க வெச்சுட்டாங்க. அதே மாதிரி நீங்க சொன்ன மாதிரி ஏற்கனவே அந்த தொகுதியில உள்ள மக்களோட மொபைல் நம்பரை டேட்டா பேஸ்ல எடுத்து வெச்சிருந்த நாங்க ‘2ஜி கேஸில் கனிமொழி, ராசா விடுதலை. தி.மு.க. மீதான பொய் களங்கம் நீங்கியது.’ன்னு டைப் பண்ணி பல பேருக்கு அனுப்பினோம். இதெல்லாமும் நமக்கு நல்ல வெயிட்டேஜ்தான்.
ஆனா அதையெல்லாம் மீறி நாம நிச்சயம் ஜெயிச்சுடுவோமான்னு இங்கேயிருக்கிற எல்லா நிர்வாகிகளும்தான் தெளிவா சொல்லணும்.” என்றாராம் படு வெளிப்படையாக.
அவர் பேச்சின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டு சிரித்த ஸ்டாலின் “நீங்க மனசுல எதை வெச்சு சொல்றீங்கன்னு எனக்கு புரியுது. ஆளுங்கட்சியும், குக்கர் டீமும் பணம் கொடுத்தாங்க. ஆனா நாம பணம் கொடுக்கலையேங்கிறதை வெச்சுத்தானே சொல்றீங்க! ஓட்டுக்காக அஞ்சு பைசா கூட கொடுக்கக்கூடாது அப்படிங்கிறதுல நான் தெளிவா இருந்தேன், அதை கட்டளையாகவும் போட்டிருந்தேன். அதேநேரத்துல பணம் கொடுத்த அந்த ரெண்டு தரப்பையும் பிடிச்சு போலீஸ்ல கொடுத்ததோடு, அவங்களுக்கு சிம்ம சொப்பனமாவும் நாம இருந்தோம்.
ஆக மொத்தத்துல முழு நேர்மையா இந்த தேர்தலை அணுகியிருக்கோம்.
இந்த தேர்தல் ஒண்ணும் நமக்கு வாழ்வா சாவா விஷயமில்லை. ஜெயிச்சால் ஒரு எம்.எல்.ஏ. அதிகமாக கிடைப்பார். தோற்றால் நம்முடையை எண்ணிக்கையில் குறைவு வரப்போவதில்லை.
அதுக்காக நாம ஜெயிக்க வேண்டாமுன்னு நான் சொல்லலை! தார்மீக ரீதியில் எவ்வளவு மக்கள் நம்மை ஆதரிக்கிறாங்க? பணம் கொடுக்கலேன்னாலும் பரவாயில்லைன்னு சொல்லி தி.மு.க.வை ஆதரிக்கிறவங்க எத்தனை பேர்? 2ஜி கலங்கம் நீங்குன வகையில் நம்மை ஏத்துக்கிறவங்க எத்தனை பேர்? ஆளுங்கட்சி மேல் வெறுப்பா இருக்கிற மக்களின் சதவீதம் என்ன? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுகிற தேர்தலாகத்தான் நான் இதைப்பார்க்கிறேன்.
அதனால் நேர்மையாய் களமாடியிருக்கிற நாம் நிச்சயம் ஜெயிப்போம். ஒருவேளை தோற்றாலும் தப்பில்லை, நாம் நேர்மையாய் நடந்தோமுன்னு மக்களுக்கு புரிந்தால் சரி. நாம் கை சுத்தமானவர்களா இருக்கிற தகவலை மக்களுக்கு கொண்டு போயி சேருங்க! அப்புறம் நிச்சயம் நிலைமை மாறும்.” என்றாராம் தெளிவான குரலில்.
நெகிழ்ந்தேவிட்டனர் நிர்வாகிகள்.
செயல்தலடா!