
எடப்பாடி பழனிசாமி கூட்டும் பொதுக்குழு செல்லாதது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தமிழன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தமிழன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அ.தி.மு.க. பொதுக் குழுவை கூட்டுவற்கு பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது என்றார்.
ஐந்தில் ஒரு பங்கு நிர்வாகிகள், பொதுக்குழுவைக் கூட்ட நினைத்தாலும், அதை பொது செயலாளரிடம் தான் கோரிக்கையாக வைக்க முடியும்.
ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி அணியினர் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இப்போது அதிமுக நிர்வாகிகளிடம் பொதுக்குழுவை கூட்ட கோரிக்கை வைத்ததுபோல் முன் தேதியிட்டு கடிதம் வாங்குகிறார்கள்.
எனவே இவர்கள் கூட்டும் பொதுக்குழு போலியானது. செல்லாதது. அதனால்தான் நாங்கள் நீதிமன்றம் சென்றுள்ளோம்.
எங்கள் பக்கம் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ., எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றாலும், எம்.எல்.ஏ. கருணாஸ் எங்களிடம் வந்துள்ளார். இதேபோல் பல எம்.எல்.ஏ.க்கள் எங்கள் பக்கம் வரக்கூடும் என்றும் செந்தமிழன் கூறினார்.