சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!

Published : Dec 08, 2025, 10:10 AM IST
EPS vs MK Stalin

சுருக்கம்

ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும். விவசாயி,வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே எந்த நேரத திலும் துளி கூட பாது காப்பு இல்லாத அவலத்தின் மொத்த உருவமான ஆட்சியைத்தான் ஸ்டாலின் நடத்தி வருகிறார். 

‘‘சுய விளம்பரத்தில் திளைக்கும் பொம்மை முதல்வர் இதை எப்போது தான் உணரப் போகிறாரோ? ஆட்சியில் இருக்கப் போகும் நான்கு மாதங்களிலாவது சட்டம் ஒழுங்கின் மீது கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர், ‘‘தமிழகத்தில் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு அதல பாதாளத் திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே உணர்த்துகின்றன.

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் இடையி லான மோதலில் பிளஸ் 2 மாணவர் கொல்லப் பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் எடை தராசால் அடித்து, காய்கறி கடைக்காரர் கொலை செய்யப்பட் டுள்ளார். தென்காசியில் சொத்து தகராறில் விவ சாயி வெட்டிக் கொல்லப் பட்டுள்ளார். சேலம், தோப்பூர் பகுதியில் தலை துண்டித்து கொல்லப்பட்ட இளைஞரின் தலையை போலீசார் தேடி வருகின்றனர். நாகர்கோவிலில் பட்டப் பகலில், சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழி மறித்து திருட முயற்சி நடந்துள்ளது. தொடர்ச்சியாக இப்படி வரும் செய்திகள், கடும் அதிர்ச்சி அளிக்கின்றன.

பள்ளி மாணவர்கள் இடையே, படிப்புதான் வளர வேண்டும். ஆனால், ஸ்டாலின் ஆட்சியில், வன்முறை போக்குதான் அதிகரித்து வருகிறது. கொலை வரை நீண்டுள்ள இந்த மோதல் வெறியை கட்டுப்படுத்த தவறியதற்கு,  ஸ்டாலின் அரசு வெட்கப்பட வேண்டும். விவசாயி,வியாபாரி, பெண், இளைஞர் என யாருக்குமே எந்த நேரத திலும் துளி கூட பாது காப்பு இல்லாத அவலத்தின் மொத்த உருவமான ஆட்சியைத்தான் ஸ்டாலின் நடத்தி வருகிறார். சட் டம் - ஒழுங்கு சீர்கெட்ட தால், தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியும் சீர்கெட்டு உள்ளது. சுய திளைக்கும் விளம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் இதை எப்போது உணரப் போகிறாரோ? ஆட்சியில் இருக்கப்போகும் நான்கு மாதங்களிலாவது, சட்டம் - ஒழுங்கில் தி.மு.க., அரசு கவனம் செலுத்த வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!