மக்கள் நலனும், வளர்ச்சியுமே முதல் நோக்கம், 26 ஆயிரத்து 509 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அதிரடி..

Published : Dec 14, 2020, 03:01 PM IST
மக்கள் நலனும், வளர்ச்சியுமே முதல் நோக்கம்,  26 ஆயிரத்து 509 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அதிரடி..

சுருக்கம்

மக்கள் நலனும், வளர்ச்சியுமே முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு கொள்கைகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான புரிதல் உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனும், வளர்ச்சியுமே முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும், தமிழகம் வளர்ந்து வருவதை பார்க்கமுடிகிறது என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் தொழில் துறை சார்பாக தொழில் வளர் தமிழ்நாடு என்ற தலைப்பில் - 18 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.ரூபாய் 19 ஆயிரத்து 955 கோடி ஒப்பந்தம் மூலம் முதலீட்டில் கையெழுத்தாகும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 26 ஆயிரத்து 509 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. மேலும், ரூபாய் 4503 கோடி ரூபாய் முதலீட்டில் 27 ஆயிரத்து 709 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய திட்டங்களுக்கு  முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 

அதேபோல் தமிழகத்தில் தொழில்முனைவோருக்கு - சிப்காட்டில் தொழில் பூங்காவில் இடங்களை எளிய முறையில் கண்டறிய (GIS) - புவியியல் தகவல் அமைப்பதற்கான தகவல் அமைந்திருக்கான புதிய இணையத்தையும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மேலும், பல உயர்ச்சியை பெற தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் முழுமையாக மக்களுடன் இறங்கி தமிழக அரசு பணியாற்றியது. பிரதமரே கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகத்தை பாராட்டியுள்ளார். 

கொரோனா தொற்று காலத்திலும் அதிக முதலீடுகள்  ஈர்த்து முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது. மக்கள் நலனும், வளர்ச்சியுமே முதன்மை நோக்கமாக கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு கொள்கைகளை வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான புரிதல் உருவாக்கப்பட்டுள்ளது.191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.வெளிநாட்டு பயணத்தின் போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்ளில் 10 செயல்பாட்டில் உள்ளது. பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது39941 கோடி ரூபாய் முதலீட்டில் 62 திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தி, மருந்து உற்பத்தி உள்ளிட்ட 24 நிறுவனங்களுடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. தமிழ்நாடு வளர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.புதிய தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடுதான், இவ்வாறு அவர் பேசினார். 
 

PREV
click me!

Recommended Stories

நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?