ஜெ. பார்முலாவை பின்பற்றும் எடப்பாடியார்.. உத்தேச பட்டியல் ரெடி... சில அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கல்தா.!

By vinoth kumarFirst Published Dec 14, 2020, 1:59 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்பதே லட்சியம் என்று அறிவித்துள்ள அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைப்பதே லட்சியம் என்று அறிவித்துள்ள அதிமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதிமுகவின் தேர்தல் பணிகளில் இப்போதைய நிலவரம் குறித்து முக்கிய நிர்வாகிகள் விசாரித்த போது பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலின்போது அமைந்த அதிமுக கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலில் தொடர வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. அதேவேளையில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட்களை வழங்கி அதிமுக போட்டியிடும் சீட்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க மாட்டோம். தனி மெஜாரிட்டி தேவையான வெற்றி வாய்ப்பு தொகுதிகளை தேர்வு செய்து அதிமுக போட்டியிடும்.

ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தலிலும் பல புதியவர்களை களமிறங்குவார். ஏற்கனவே எம்.பி., எம்எல்ஏ இருந்தவர்களில் பலரையும் மாற்றிவிட்டு யாரும் எதிர்பார்க்காத புதுமுகங்களையும் போட்டியிட வைப்பார். அதிமுக தொண்டர்கள் கட்சி. எனவே தொண்டர்களின் விருப்பப்படியே வேட்பாளர்கள் தீர்மானிக்கப்பட வேண்டும். சீட் கிடைக்காதவர்களும், புதிய வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா அறிவுறுத்தியிருக்கிறார். ஜெயலலிதாவின் இந்த பார்முலாவைத்தான் இப்போதுள்ள அதிமுக தலைமையும் பின்பற்றி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலின் போது அப்போது எம்.பி.க்களாக இருந்த பலருக்கும் மீண்டும் சீட் கொடுக்கவில்லை. புதுமுகங்களை களமிறக்கியதால்தான் அந்த தேர்தலில் எங்களுக்கு தோல்வி என்று கூறமுடியாது. திமுக கூட்டணியின் பொய் பிரச்சாரம் அப்போது எடுப்பட்டதால்தான் எங்கள் கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இப்போது அரசியல் கள நிலவரம் மாறிவிட்டது. இனிமேல் பொய் பிரச்சாரங்களால் திமுக கூட்டணி ஜெயிக்கவே முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு வேட்பாளர் பட்டியலைத் தீர்மானித்தோமோ, அதே பாணியில் தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் தீர்மானிக்கப்படும் கட்சித் தலைமை நடத்திய சர்வே மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 234 தொகுதிகளுக்கும்  உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டது.

இப்போது எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் சிலர் இந்த உத்தேச பட்டியல் இடம் பெறவில்லை. கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு முடிந்தபின் இந்த பட்டியல் இறுதி செய்யப்படும். கட்சித் தலைமை சில எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களிடம் இந்த பற்றி கொடுக்காட்டி பேசியிருக்கிறது. உங்களுக்கு மீண்டும் சீட் அளித்தால் உள்ளடி உள்ளடி வேலைகளால் தோல்வி வரும். எனவே புதியவர் களமிறக்கப்படுவார். உங்களுக்கு வேறு பதவிப்பொறுப்பு வழங்கப்படும் என்று அவர்களிடம் கூறப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் எதிர்பார்த்து வாய்ப்பு கிடைக்காதவர்கள் யாரும் அதிமுகவை விட்டு வெளியேறவில்லை. அதுபோல் சட்டப்பேரவை தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் யாரும் அதிமுக விட்டு வெளியேறப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

click me!